தீவிர சிகிச்சை பிரிவில் திமுக எம்எல்ஏ! அதிர்ச்சியில் உடன்பிறப்புகள்! - Seithipunal
Seithipunal


விக்கிரவாண்டி எம்.எல்.ஏ. புகழேந்தி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி -

விழுப்புரம்: விக்கிரவாண்டி எம்.எல்.ஏ. புகழேந்தி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ. புகழேந்தக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் தொகுதிக்குட்பட்ட அத்தியூர் திருவாதியை சேர்ந்தவர் புகழேந்தி. அமைச்சர் பொன்முடியின் தீவிர விசுவாசியான இவர், கடந்த 1973 ஆம் ஆண்டு முதல் திமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வருகிறார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ ராதாமணி உடல் நல குறைவால் உயிரிழந்ததால் நடத்தப்பட்ட இடைத்தேர்தலில், இவர் திமுக சார்பாக போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

பின்னர் 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற பொது தேர்தலில் அதே விக்ரவாண்டி தொகுதியில் களமிறங்கிய புகழேந்தி சுமார் 9500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார்.

அண்மையில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக அமைச்சர் உதயநிதி, விழுப்புரம் மாவட்டத்தின் செயலாளர்களில் ஒருவரான புகழேந்தி பெயரை உச்சரிக்காமல் தவிர்த்தது திமுகவினர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், அவர் உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vikravandi DMK MLA Pugazhenthi in hospital


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->