"போ.. போ.. வெளியே போ".. நடிகர் விஜயை விரட்டி அடித்த கேப்டன் ரசிகர்கள்.?! - Seithipunal
Seithipunal


தேமுதிக தலைவரும், தென்னிந்திய நடிகர்கள் சங்க முன்னாள் தலைவருமான நடிகர் விஜயகாந்த்  உடல்நலக்குறைவால் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை காலமானார். இதையடுத்து அவரது உடல் தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டு, கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி வந்தனர்.

மேலும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் தமிழ் திரையுலகின் முன்ணனி நடிகர் விஜய் நேற்று இரவு கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்திற்கு நேரில் சென்று கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். பின்னர் அங்கிருந்து புறப்படும் போது சில வினாடிகள் கண்கலங்கி நின்று கேப்டன் விஜயகாந்த் முகத்தை பார்த்து விட்டு புறப்பட தயாரான போது திடீரென சலசலப்பு ஏற்பட்டது.

தேமுதிக அலுவலகம் முன்பு குவிந்திருந்த கேப்டன் விஜயகாந்த் ரசிகர்களும், அக்கட்சி தொண்டர்களும் நடிகர் விஜயை நோக்கி "போ...போ... வெளியே போ.." கோஷம் எழுப்பியவாறு விஜயை நெருங்கினர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. அப்போது சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு பணியில்  இருந்த போலீசார் நடிகர் விஜய்க்கு பாதுகாப்பு அரணாக நின்று அவரை அழைத்து சென்றனர். கடந்த 1993 ஆம் ஆண்டு எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான செந்தூரபாண்டி படம் விஜய்க்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vijayakanth fans raised slogans against actor Vijay


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->