மணப்பாறை அருகே பரபரப்பு - சிறுவன் மீது சிறுநீரை ஊற்றிய கொடூரம் - சாதி தான் காரணமா? - Seithipunal
Seithipunal


மணப்பாறை அருகே பரபரப்பு - சிறுவன் மீது சிறுநீரை ஊற்றிய கொடூரம் - சாதி தான் காரணமா?

திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை அருகே விடதிலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் இளங்கோ - ராசாத்தி தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்தக் குடும்பம் அப்பகுதியில் வாழும் இரண்டு பட்டியல் சமூக குடும்பங்களில் ஒன்று.

இவருடைய வீட்டிற்கு அருகே ஆதிக்க சாதியைச் சேர்ந்த வடிவேலு என்பவர் வசித்து வருகிறார். இவர் பட்டியல் சமூகத்தை சேர்ந்த இளங்கோவின் குடும்பத்தினரை சாதி ரீதியாக தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளார். இந்த நிலையில், வடிவேலு வீட்டின் நாய் கடந்த சில நாட்களுக்கு முன்பு இளங்கோவின் மகனை, விரட்டிச் சென்றபோது சிறுவன் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டுள்ளது.

 

இதையறிந்த சிறுவனின் தாய் ராசாத்தி சம்பவம் தொடர்பாக வடிவேலுவின் மனைவியிடம் முறையிட சென்றுள்ளார். அங்கு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வடிவேலுவின் மனைவி ராசாத்தியை சாதி பெயரைச் சொல்லித் திட்டியுள்ளார்.

இதைதொடர்ந்து மறாவது நாள் வடிவேலுவின் மகன் பாட்டிலில் சிறுநீர் கழித்து அதை தனது மகன் மீது ஊற்றி விட்டதாக இளங்கோ குற்றம் சாட்டியுள்ளார்.இந்த முன்விரோதம் காரணமாக கடந்த அக்டோபர் 4ம் தேதி, ராசாத்தியை வடிவேலுவின் மனைவி தண்ணீர் குழாயால் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த ராசாத்தி, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இதனால், ஆத்திரமடைந்த இளங்கோ சம்பவங்கள் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் படி காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படாததோடு, உரிய நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்று இளங்கோ தரப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்தச் சம்பவம் திருச்சி மாவட்ட மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

urine poured on boy near trichy manaparai


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->