விரைவில் சென்னைக்கு வருகிறது மின்சார பேருந்து..! தமிழக அரசின் அசத்தல் திட்டம்..!!   - Seithipunal
Seithipunal


 விரைவில் சென்னைக்கு வருகிறது மின்சார பேருந்து..! தமிழக அரசின் அசத்தல் திட்டம்..!!  

நாளுக்கு நாள் எரிபொருட்களின் விலை அதிகரித்து கொண்டே வருகிறது. புவி வெப்பமயமாதலுக்கு இந்த எரிபொருளில் இயங்கும் வாகனங்கள் முக்கிய காரணம் வகிக்கின்றன. 

இதனை கட்டுப்படுத்தும் விதமாக உலகில் பலநாடுகள் மின்சாரம் மூலம் இயங்கும் கார்கள், பேருந்துகள் பயன்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளன. இதில் இந்தியாவிலும் முக்கிய தலைநகரங்களில் பேட்டரி மூலம் இயங்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், இன்று சென்னையில் MR. விஜய்பாஸ்கர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, விரைவில் தமிழகத்தில் முதல்கட்டமாக  பேட்டரி மூலம் இயக்கப்படும் 80 பேருந்துகள் சென்னையிலும் 20 பேருந்துகள் கோவையிலும்  இயக்கப்படும் என தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்தெரிவித்துள்ளார்.

மேலும், பேருந்து பராமரிப்பு செலவுகள் குறையும். இந்த பேட்டரி பேருந்து விலை 2 கோடி ருபாய். இந்த பேருந்தில் 20 இருக்கைகள் இருக்கும். இதில் சுமார் 100 பேர் வரை நின்று கொண்டே பயணம் செல்லலாம்'' என அவர் தெரிவித்தார்.

விரைவில் 100 மின்சார பேருந்துகள் வாங்கப்படும். அவற்றில் சென்னையில் 80-ம், கோவையில் 20-ம் இருந்துகள் வாங்கப்படும். அவற்றில் சென்னையில் 80-ம், கோவையில் 20-ம் இயக்கப்படும். போக்குவரத்து தொழிலாளர்களுக்கான நிலுவைத்தொகையை வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மாணவர்களுக்கு பஸ் பாஸ் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.  

கடந்த ஆண்டு தீபாவளியில் மொத்தம் 5.35 லட்சம் மக்கள் பயணம் செய்தனர். எனவே அதே அளவிலான மக்கள் இம்முறையும் எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. 

English Summary

TN Minister Press meetSeithipunal