நாசா காலண்டரில் இடம்பெற்ற தமிழக மாணவிகளின் ஓவியம்.!  - Seithipunal
Seithipunal


நாசா விண்வெளி ஆய்வு மையம் வெளியிட்டுள்ள 2024 ஆம் ஆண்டு காலண்டரில் திண்டுக்கல் மாவட்டம் பழனி தனியார் பள்ளியை சேர்ந்த மூன்று மாணவிகளின் ஓவியம் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் ஒவ்வொரு ஆண்டும் தங்களுடைய காலண்டரில் போடுவதற்காக உலக அளவில் ஓவிய போட்டியை நடத்தி வருகிறது. அந்த வகையில் இந்த வருடத்திற்கான ஓவிய போட்டி நடத்தப்பட்டது. 

இந்தப் போட்டியில் 194 நாடுகளை சேர்ந்த 4 முதல் 12 வயதிற்கு உட்பட்ட லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர். இந்தியாவிலிருந்து மட்டும் 5 ஓவியங்கள் தேர்வு செய்யப்பட்டது.
இதில் பழநி அருகேயுள்ள ஸ்ரீ வித்யா மந்திர் பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் துகிலோவியா, லயாஷினி, தித்திகா உள்ளிட்ட மூன்று பேரின் ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன. 

இந்த மாணவிகளை பள்ளி தாளாளர் வீரா எஸ்.டி.சாமிநாதன், இயக்குநர் கார்த்திகேயன், முதல்வர் வசந்தா மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் பாராட்டினர். பின்னர், மும்பையில் நடந்த தேசிய ஓவியப் போட்டியில் இப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு 37 தங்கம், 3 வெள்ளி, 10 வெண்கலப் பதக்கம் மற்றும் 1 வெள்ளிக் கேடயம் ஆகியவற்றை வென்றிருப்பதாக தெரிவித்தனர்.

நாசா காலண்டர் ஓவியப் போட்டியில் இந்தப் பள்ளி மாணவிகளின் ஓவியம் 5-வது முறையாக தேர்வாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

three tamilnadu students draing in nasa calendar


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->