பெண்ணிற்கு ஆடையை அவிழ்த்து, மொட்டை அடித்து, நாக்கில் சூடு வைத்த நாத்தனார்கள்!. அதிர்ந்துபோன நீதிபதி!. - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் சடங்கு என்ற பெயரில் பெண்கள் துன்புறுத்தப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில் தருமபுரியை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 2001-ஆம் ஆண்டு தன்னுடைய நாத்தனார்கள் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அந்த புகாரில் தனக்கு பேய் பிடித்துள்ளதாகக் கூறி என்னுடைய நாத்தனார்கள் நள்ளிரவில் எங்கள் ஊரின் அருகில் உள்ள தொப்பூர் அணைக்கு அழைத்துச் சென்று, தன்னுடைய ஆடைகளை களைத்து மொட்டை அடித்து, நாக்கில் சூடு வைத்து, என்னுடைய தாலியையும் கழட்டி பின்பு  மீண்டும் கணவனை கட்டச்சொன்னார்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.

                                          

இதனை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்னர் போலீசார்  நாத்தனார்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதன் பின் அவர்களுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில் இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.அது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, சம்பவம் நடந்து 17 ஆண்டுகள் ஆகிவிட்டதாலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள், ஏற்கெனவே தண்டனையே அனுபவித்துவிட்டதாலும், இந்த தண்டனையே அவர்களுக்கு போதுமானது என்று கூறினார்.

மேலும் நான்கு நாத்தனார்களுக்கும் தலா 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, இதை பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். சடங்கு என்ற பெயரில் பெண்களை துன்புறுத்துவதை சகித்துக் கொள்ள முடியாது என்றும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனைகள் விதிக்கப்பட வேண்டும் எனவும் தன்னுடைய கண்டனத்தையும் அதில் பதிவு செய்திருந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The Madras High Court has said that women can not be tortured in the name of the ritual.


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->