தல திருவிழா ஆரம்பம்! அஜித்தின் அடுத்த படம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது!! - Seithipunal
Seithipunal


நடிகர் அஜித்குமாரின் 59 படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இணைந்துள்ளார்.

ரசிகர்களால்  தல  என்று அன்போடு அழைக்கப்படும் அஜித், சிறுத்தை சிவாவுடன் நான்காவது முறையாக இணைந்து "விஸ்வாசம் " படத்தில் நடித்துள்ளார்.  இந்த படம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. இந்நிலையில் அஜித்தின் அடுத்தபடம் குறித்து ஒரு முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.

அதாவது, அஜித்தின் 59 ஆவது படத்தை யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக யுவன் ஷங்கர் ராஜா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 



 

இந்நிலையில், #தல59 பூஜை  இன்று போடப்பட்டது. இந்த படம் அடுத்த ஆண்டு மத்தியில் வெளியிடப்படும் எனவும் தகவல் வந்துள்ளது. விஸ்வாசம் படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் நிலையில், அஜித்தின் 59 ஆவது படமும் அடுத்த ஆண்டு ரிலீஸ் ஆகும் என்பதால் அடுத்த ஆண்டு அஜித், தனது ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுக்க உள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thala 59' music director officially confirmed #Thala59


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->