அந்த மலை மேல அப்படியொரு அசிங்கம் நடக்குது.. சீரழியும் இளசுகள்.. சிதையும் கொங்கு மண்டல கலாச்சாரம்..! - Seithipunal
Seithipunal


நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டு மலையில் அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில், அமைந்துள்ளது. திருச்செங்கோடு என்பதற்கு ‘அழகிய இறைத்தன்மை பொருந்திய செந்நிற மலை என்றும், செங்குத்தான மலை” என்றும் பொருள். மலையின் பெயரே ஊருக்கு அமைந்துவிட்டது.

கொங்கு நாட்டில் அமைந்துள்ள ஏழு சிவா தலங்களில் மிக முக்கியமானதாக இக்கோவில் உள்ளது. திருவண்ணாமலை போலவே இம்மலையை பௌர்ணமி நாளில் வலம் வந்தால் கயிலாயத்தையும் வைகுண்டத்தையும் வலம் வந்த பலன் கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமையுடன் வாழ, இக்கோவிலில் கேதார கவுரி விரதம், புரட்டாசி வளர்பிறை அஷ்டமி திதியில் ஆரம்பித்து 21 நாள்கள் கடைபிடிக்கப்படுகிறது.

60 அடி நீளத்தில் ஐந்து தலை நாகத்தின் சிலை கோவில் படிக்கட்டு அருகில் உள்ளது. நாகதோஷம், ராகு-தோஷம், காள சர்ப்ப தோஷம், களத்திர தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபாடுசெய்கின்றனர்.

இத்தகைய ஆன்மீக சிறப்பு வாய்ந்த மலை, இன்றைக்கு கோவில் அமைந்துள்ள பகுதியை சுற்றியுள்ள கல்லூரி இளசுகளால் சீரழிக்கப்பட்டு காட்சியளிக்கிறது.

குடும்பத்துடன் கோவிலுக்கு செல்லும் பலரும், அடுத்த முறை குடும்பத்தோடு செல்லக்கூடாது என்று நினைப்பு வரும் அளவிற்கு அருவருப்பான காட்சிகள் வெட்ட வெளியிலேயே அரங்கேறுகின்றன.

இக்கோயிலை சுற்றியுள்ள பகுதியில் ஆசியாவின் மிகப்பெரிய பெண்கள் கல்லூரியும், பல பொறியியல் கல்லூரிகளும் அமைந்துள்ளது.  இதில் கல்லூரிக்கு வரும் காதல் ஜோடிகள், பல நேரம் வகுப்புகளை புறக்கணித்து விட்டு திருச்செங்கோட்டு மலைக்கு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

மக்கள் நடந்து செல்லும் வழியிலேயே ஜோடியாக அமர்ந்து கொண்டு, அத்து மீறலில் ஈடுபடுகின்றனர். இதனால் பலரும் குழந்தைகளை மலைக்கு மேலே அழைத்துச்செல்லவே பயப்படுகின்றனர். பலமுறை இதுகுறித்து கோவில் நிர்வாகத்திடம் பொதுமக்கள் சொல்லி பார்த்தும் எந்த பலனும் இல்லை.

புனிதம் காக்கப்பட வேண்டிய ஆன்மீக தளத்தில் இளசுகள் புனிதம் தவறி பருவ இச்சைகளை அரங்கேற்றி வருவது அப்பகுதி மக்களுக்கு வேதனையை ஏற்ப்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

temple thiruchengode


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->