அந்த டிரெயின்ல போறதுக்கு.. பேசாம நாங்க பிளைட்லயே பறந்து போயிரலாம் - மக்கள் மனதில் 'தேஜஸ்' விதைத்த வெறுப்பு.! - Seithipunal
Seithipunal


சாதாரண மக்கள் பயணம் செய்யும் வகையிலான ரயிலை இயக்க வேண்டும் என்று கூறினால் மாறாக கோடீஸ்வரர்கள் பயணம் செய்யும் ஹம்சபார், தேஜஸ் போன்ற ரயில்களை தென் மாவட்டங்களுக்கு ரயில்வே துறை இயக்குகிறது என ரயில் பயணிகள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.ரயில்வேதுறை தேஜஸ் என்ற ரயிலைதமிழகத்திலும் சமீபத்தில் அறிமுகப்படுத்தியது.

சராசரியாக 70 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும்தேஜஸ் ரயில் சென்னை-மதுரை இடையேயான 497 கிலோ மீட்டர் தூரத்தை 7 மணி நேரத்தில் சென்றடையும்.

தற்போது வைகை எக்ஸ்பிரஸ் 8 மணி நேரத்திலும், பாண்டியன் எக்ஸ்பிரஸ் 9 மணி நேரத்திலும் மதுரை செல்கின்றன. தேஜஸ் ரயிலில் சேர் கார் கட்டணம் ரூ.1,140-ல் இருந்து ரூ.1,200 வரைக்குள் நிர்ணயிக்கப்படுகிறது.

சிறப்பு வகுப்பு ரயில் பெட்டிகட்டணம் ரூ.2,135-ல் இருந்து ரூ.2,200 வரை இருக்கும். தேஜஸ் ரயில் கட்டணம் சதாப்தி ரயில் கட்டணத்தை விட 20 சதவீதம் அதிகமாக இருக்கும். இந்த ரயில் விழுப்புரம், திருச்சிஆகிய 2 ரயில் நிலையங்களில் மட்டுமே நின்றுசெல்லும். இந்த புதிய ரயில் ஏழை மற்றும் நடுத்தரமக்களுக்கான ரயில் அல்ல.

முழுக்க முழுக்க உயர் வகுப்பினருக்கான ரயிலாகஉள்ளது. பயணிகள் யாரிடமும் கேட்காமலேவிடப்பட்ட ரயில் இது. அதோடு மற்ற ரயிலை காட்டிலும் அதிக கட்டணம் கொண்டது. பயணிகள் பெரிதும் விரும்பியது சென்னைக்கு கூடுதலாக பகல் நேர ரயில் இயக்கவேண்டும் என்பதுதான்.

ஆனால் ரயில்வே துறை செல்வந்தர்கள் செல்லும் வகையில் விலைஉயர்ந்த கட்டணம் கொண்ட ரயிலை இயக்குகிறது. இந்த ரயிலால் பொதுமக்களுக்கு பெரிய அளவில் நன்மை இல்லை. ஏற்கனவே திருநெல்வேலி-காந்திதாம் ஹம்சபார் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த ரயில் 75 சதவீதம் காலியாகத்தான் செல்கிறது. அதோடு இது போன்ற சொகுசு ரயில்களில் முதியோர் சலுகை, பாஸ் ஹோல்டர்ஸ், பெண்களுக்கு சலுகை போன்ற எந்தவித சலுகையும் கிடையாது என பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் பல்வேறு அமைப்புகள், கட்சிகள்மற்றும் பொதுநலன் சார்ந்த அமைப்புகள் ரயில்வே அமைச்சர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளிடம் கொடுத்த மனுவின் அடிப்படையில் இதுவரை எந்தவித புதிய ரயில்களையும் ரயில்வே துறை இயக்கவில்லை. அதோடு புதிதாக விடப்பட்ட சில ரயில்கள் இன்னும் அட்டவணையில் தான் ஓடுகின்றன என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tejas train not suitable for low class peoples


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->