அடுத்த 5 நாள் தமிழகத்திற்கு மழை! ஜில்லுனு செய்தி சொன்ன தமிழ்நாடு வேதெர்மேன்! - Seithipunal
Seithipunal


தெற்கு மற்றும் மேற்கு தமிழகத்தில் அடுத்த நான்கு முதல் ஐந்து நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் (தமிழ்நாடு வெதர்மேன்) தகவல் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் 'தமிழ்நாடு வெதர்மேன்' என்ற பெயரில் வானிலை குறித்த தகவல்களை தெரிவித்து வரும் தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தின் தூத்துக்குடி, ராமநாதபுரம், நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த நான்கு முதல் ஐந்து நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.

இதேபோல் தென்காசி, விருதுநகர், தேனி, கொடைக்கானல், வால்பாறை, நீலகிரி ஆகிய மாவட்டங்களிலும் அடுத்த நான்கு முதல் ஐந்து நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் வெயில் வாட்டி வரும் நிலையில், அடுத்த ஐந்து தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக பிரதீப் ஜான் தெரிவித்திருப்பது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

குறிப்பு : இது அதிகாரப்பூர்வ வானிலை அறிவிப்பு கிடையாது. தனியார் வானிலை ஆர்வலரின் அறிவிப்பு மட்டுமே. அதிகாரப்பூர்வ வானிலை அறிவிப்புகளை இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பு மூலம் தெரிந்து கொள்ளலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TAMILNADU WEATHERMAN REPORT 12042024


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->