கோடை காலத்தில் ஐஸ் நீர் குடிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள்.! - Seithipunal
Seithipunal


கோடை காலங்களில் குளிர்ச்சியான உணவுகள், குளிர்ச்சியான பானங்களை குடிப்பதற்கு அதிகம் விரும்புகிறோம். கடுமையான வெப்பத்திலிருந்து உடலை காத்துக் கொள்வதற்காக குளிர்சாதனப்பட்டியில் இருந்து ஐஸ் கட்டிகளை தண்ணீரில் போட்டு குடிக்கிறோம். 

தண்ணீர் பாட்டில்களை குளிர்சாதனப்பட்டியில் வைத்து சேமித்து அதனை குளிர்ச்சி அடைந்தவுடன் பருகுகிறோம். இத்தகைய ஐஸ் நீரை பரவுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

ஐஸ் நீரை அதிகமாக குடிப்பது உடலுக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்தும். குறிப்பாக செரிமான மண்டலம் பாதிக்கப்படும். இதனால் வயிற்று வலி தொண்டையில் ரத்த நாளங்கள் பாதிப்பு போன்றவை ஏற்படும். 

மேலும் தொண்டை புண், எரிச்சல் போன்றவை ஏற்படும். ஐஸ் நீரை குடிக்கும் பொழுது முதுகு தண்டுவட பகுதியில் உள்ள பல நரம்புகள் குளிர்ச்சி அடைவதால் மூளையின் செயல்பாடு பாதிக்கப்படும். அது தலைவலியை ஏற்படுத்தும். அதிலும் ஒற்றைத் தலைவலி பிரச்சனை கடும் பாதிப்பு ஏற்படுத்தும். 

அடிக்கடி சளி, இருமல் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும். கோடையில் ஐஸ் நீரை குடிப்பதால் தொண்டையில் வீக்கம், அசோகரிகம் ஏற்படலாம். 

அதிகமாக குடிப்பதால் இதய துடிப்பு குறையும். ஐஸ் நீரை அடிக்கடி குடிக்கும் பொழுது பற்களுக்கும் பாதிப்பு ஏற்படும். சிலருக்கு பற்கள் குளிர்ச்சி அடைவது போன்ற உணர்வு ஏற்படும். எந்த பொருளையும் உட்கொள்வதற்கு கடினமான சூழ்நிலை உண்டாகும். மேலும் பல் கூச்சம்,  பல் குளிர்ச்சி போன்றவை ஏற்படும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ice water drinking effects


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->