தமிழிசை வெளியிட்ட புதிய அறிவிப்பு!! தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி மக்களுக்கு ஆச்சர்யம்!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வரும் 18 ம் தேதி பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அதிமுக , திமுக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் அரசியலில் பரபரப்பாக இயங்கி வருகிறது. 

இந்நிலையில் தேசிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகின்றது. இந்நிலையில், பாஜக வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது. இதில் பாஜக தமிழக தலைவரான தமிழிசை அவர்களுக்கு தூத்துக்குடி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

மேலும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் இரு பெண் தலைவர்கள் எதிர், எதிராக மோதும் நிலை உருவாகியுள்ளது. இது தமிழக மக்கள் மட்டுமல்லாது அனைவருக்கும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மார்ச் 25 ல் தமிழிசை வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்நிலையில், தமிழிசையின் வேட்புமனுவில் சிக்கல் இருப்பதாகவும், அதனை  2 மணிக்கு மீண்டும் பரிசீலனை செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியது. 

இந்நிலையில், தற்பொழுது பாஜக தமிழக தலைவரும், பாஜகவின் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளருமான தமிழிசை, பாஜகவின் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் அறிகையை வெளியிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilisai soundhararajan released manifesto for thuthukudi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->