பன்றி காய்ச்சலால் ஒரு வயது குழந்தை பலி! தமிழக அரசே காரணம்!! - Seithipunal
Seithipunal



கடந்த சில நாட்களாக சென்னையில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது. ஆனால் சுகாதாரத்துறை இதுவரை எந்த ஒரு முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்த மாதிரி தெரியவில்லை என அரசை மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலால் தொடர்ந்து பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குழந்தைகளை குறி வைத்து டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் தாக்கி வருகிறது  கடந்த சில நாட்களுக்கு முன்னர் 7 வயது குழந்தைகள் இருவர் டெங்குவால் பாதிக்கப்பட்டு எழும்பூர் மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதை தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு ஒன்றரை வயது குழந்தை தருண் பரிதமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இதுவரை தமிழகம் முழுவதும் 25000 க்கும் மேற்பட்ட நபர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொண்டு வருகிறனர். ஆனால், தமிழக அரசோ, டெங்கு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக பொய்யான செய்தியை மக்களிடையே பரப்பி வருகிறது. தமிழகத்தில் பன்றி காய்ச்சல் மற்றும் டெங்கு மிக வேகமாக பரவி வருகிறது. எந்த ஒரு முன்னெச்சரிக்கையும் எடுக்காத இந்த அரசு, பன்றி காய்ச்சல் மற்றும் டெங்குவால் பாதிக்கப்பட்டாலும், அவர்களுக்கு மர்ம காய்ச்சல் என்று பொய் சொல்லி வருகிறது என நெட்டிசன்கள் குற்றம் சாட்டினார்.  

சென்னை மட்டுமல்லாம், காஞ்சிபுரம், திருவள்ளூர், திருப்பூர், கோவை உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் டெங்கு பரவி வருகிறது. நேற்று கூட கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு, பன்றிக்காய்ச்சல் உள்பட காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 

இந்நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட ஒரு வயது குழந்தை இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இந்த சம்பவம் அந்த ப்குதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

நாளொன்றுக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறியோடு 30-50 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

டெங்கு கொசு உருவாகுவதை தடுக்க சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். கொசு உருவாக குறைந்தபட்சம் ஒரு வாரத்தில் இருந்து 10 நாட்கள் வரை எடுத்துக்கொள்ளும் என்பதால், முறையாக மூடிவைக்காமல் பயன்படுத்தும் குடிநீரில்கூட எளிதாகக் கொசுக்கள் உருவாகிவிடுகின்றன.  அதனால் அனைவரும் பாதுகாப்பாக முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.   

 

மருத்துவத்தில் அவசர நிலையை பிரகடனபடுத்தி டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என கடந்த சில திங்களுக்கு முன்  மருத்துவர் அன்புமணி ராமதாஸ், முக ஸ்டாலின் தமிழக அரசை வலியுறுத்தி இருந்தனர். ஆனால், இந்த அரசோ எதையும் கண்டுகொள்ளவில்லை. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Swine Flu Problem


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->