அதிகாலையிலேயே பரபரப்பு.. மொத்தமாக 60 மீனவர்கள் கைது.!! கொந்தளிக்கும் தமிழகம்.!! - Seithipunal
Seithipunal


ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திலிருந்து சென்ற மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது நேற்று இரவு 25 மீனவர்களை கைது செய்ததோடு அவர்கள் பயணம் செய்த 3 விசைப்படகுகளை பறிமுதல் செய்தனர்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இன்று அதிகாலை மன்னார் கடற்பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 7 மீனவர்களை கைது செய்ததோடு மற்றும் அவர்கள் பயணம் செய்த 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் மற்றும் படகுகளை மன்னார், யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க அழைத்துச் சென்றுள்ளனர். 

மார்ச் மாதத்தில் மட்டும் வங்கக் கடலில் மீன் பிடித்த தமிழக மீனவர்கள் 60க்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க விட்டால் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக தமிழக மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Srilankan Navy arrested 60 tamilnadu fishers in March


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->