இடது கையில் செல்போன்...வலது கையில் கியர் : தற்காலிக ஓட்டுனரால் ஆபத்தான பயணம்..!! அதிர்ச்சியில் பயணிகள்..!! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால், கனரக வாகன ஓட்டுனர்கள், ஆட்டோ ஓட்டுனர்களை கொண்டு பேருந்துகளை அரசு இயக்கி வருகிறது.

இதனால், பல இடங்களில் விபத்துகள் ஏற்பட்டுள்ளது. சென்னை சாந்தோமில் ஒருவரும், விருத்தாசலத்தில் ஒருவரும் விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

அதே நேரத்தில் பேருந்தை ஓட்டும் தற்காலிக ஓட்டுனர்கள், செல்போனில் பேசிக்கொண்டு ஓட்டுவது, வேகமாக பயமுறுத்தும் வகையில் ஓட்டுவது என்று தொடர்ந்து அரஙகேறிக்கொண்டே இருக்கிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் பெரம்பலூர் - ஆத்தூர் வழித்தடத்தில் 45 3096 என்ற பேருந்தை ஒட்டிய தற்காலிக ஓட்டுனர் 15 நிமிடத்திற்கு மேலாக செல்போனில் பேசிக்கொண்டு பேருந்தை இயக்கினார்.

அதிலும், இடது கையில் செல்போனை வைத்துக்கொண்டு, வலது கையால் கியரை மாற்றி பேருந்தை இயக்கியது பயணிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இதைக்கண்ட பயணி ஒருவர் தன்னுடைய செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Shocking temporary drivers dangerous driving


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->