பொங்கல் போனஸ் விவகாரத்தில் திடீர் திருப்பம் - அதிர்ச்சியில் தொழிலாளர்கள் - தொடரும் சோகம்..! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி 4 தாலுகாக்களைக் கொண்டுள்ள மிகச்சிறிய மாவட்டம். ஒரு சதுர கிலோமீட்டரில் 1119 பேர் என அடர்த்தியாக மக்கள் வசிக்கும் மாவட்டம்.

இந்த மாவட்டத்தில் மக்கள் தொகை அடிப்படையில் 55 பேரூராட்சிகள் உள்ளன. இது தமிழ்நாட்டில் உள்ள பேரூராட்சிகளில் (528) 10 சதவீதத்துக்கும் அதிகமாகும்.

நகர்மயமாதலின் தாக்கம் அதிகமுள்ள இந்த பகுதிகளில் தேங்கும்குப்பைகளை அன்றாடம் அகற்றவும், அவற்றை தரம் பிரித்து மறுசுழற்சிக்கு உட்படுத்தவும் சுமார் 2 ஆயிரம் தூய்மைபணியாளர்கள் உள்ளனர்.

இவர்களுக்கான அடிப்படை தேவைகளையோ, குறைந்தபட்ச சம்பளத்தையோ ஆட்சியாளர்களால் உறுதி செய்ய முடியவில்லை என்கிறார் கன்னியாகுமரி மாவட்ட உள்ளாட்சி ஊழியர்கள் சங்கத்தின் செயலாளர்.

மேலும் அவர் கூறுகையில், ஒப்பந்த முறையில், சுய உதவிக்குழுக்கள் மூலமாக நியமிக்கப்படும் இந்த ஊழியர்களுக்கு ஒவ்வொரு பேரூராட்சியிலும் ஒவ்வொரு விதமான சம்பளம் வழங்கப்படுகிறது.

மாவட்ட ஆட்சியர் தினக்கூலியாக அறிவித்த ரூ.470 எந்த பேரூராட்சியாலும் வழங்கப்படவில்லை. மாதம் ரூ.5 ஆயிரம்முதல் 9 ஆயிரம் வரை மட்டுமே வழங்கப்படுகிறது.

இந்த ஊழியர்களுக்கு பெரும்பாலான இடங்களில் பாதுகாப்பு கருவிகள், சீருடைகள் வழங்கப்படுவதில்லை. தெருக்களையும் குப்பைகள் தேங்கும் இடங்களையும் பராமரிப்பது, குப்பை சேகரிப்பது, சேகரித்த குப்பைகளை உரக்கிடங்கில் தரம் பிரிப்பது என இவர்களுக்கு அதிக வேலைப்பளு உள்ளது.

ஊழியர் பற்றாக்குறையால் பல இடங்களில் வாங்கப்பட்ட வாகனங்கள் இயக்கப்படாமலேயே வீணாகும் நிலை உள்ளது.

மேலும், இதுகுறித்து மாவட்ட ஆட்சியரை துப்புரவு ஊழியர்கள் சந்தித்துள்ளனர். அப்போது பேரூராட்சி தூய்மைப்பணியாளர்களின் சம்பளம், பொங்கல் போனஸ் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்துபேசியதாகவும் அவர் தெரிவித்துள்ளனர்.

ஆனால், அதற்கான அரசாணை ஏதும் இல்லாத நிலையில் தன்னால் ஏதும் செய்வதற்கில்லை என கைவிரித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர்.தூய்மை இந்தியா என பிரதமர் முதல்அவரை பின்பற்றி தமிழகத்தில் எப்போதாவது துடைப்பத்துடன் தெருக்கூட்டும் கவர்னர், இவர்களை வேடிக்கை பார்க்கும்தமிழக முதல்வர் வரை எவரும் இந்த ஊழியர்களின் பணிநிலை குறித்தோ, குடும்பங்களின் நல்வாழ்வு குறித்தோ அக்கறைகாட்டவில்லை என்று துப்புரவு தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sewer did not get any support from govt


கருத்துக் கணிப்பு

சரத்குமார் தனது கட்சியை பாஜகவுடன் இணைந்திருப்பது யாருக்கு லாபம்?



Advertisement

கருத்துக் கணிப்பு

சரத்குமார் தனது கட்சியை பாஜகவுடன் இணைந்திருப்பது யாருக்கு லாபம்?




Seithipunal
--> -->