செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33வது முறையாக நீட்டிப்பு.! - Seithipunal
Seithipunal


சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் 

செந்தில் பாலாஜி தரப்பில் அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையே கடந்த 15ஆம் தேதி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி இன்று மனு மீதான உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்திருந்தார். 

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் காணொளி மூலமாக சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி முன்பு ஆஜர் படுத்தப்பட்டார். 

இதனை தொடர்ந்து செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஏப்ரல் 22 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் அமலாக்கத்துறை வழக்கின் அசல் ஆவணங்களை பெற்றுக் கொள்வதற்காக செந்தில் பாலாஜியை பிற்பகலில் ஆஜர்படுத்த வேண்டும் என சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Senthil Balaji Court custody extended


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->