பழனி கோட்ட நெடுஞ்சாலைப் பராமரிப்பு பணிகள், தனியாருக்கு 5 வருடம் வரை நீடித்து வாரி வழங்கியது அரசு..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ள சாலைகள், பெரும்பாலும் தரம் குறைந்தவைகளாகவே இருக்கின்றன. நெடுஞ்சாலைகளிலும் இதே கதி தான்.  சாலை விபத்துக்களுக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கின்றது.

நமது தமிழகத்தில், நெடுஞ்சாலைத் துறைக் கட்டுப்பாட்டில், 62,017 கி.மீ. துார நெடுஞ்சாலைகள் உள்ளன.

இதில், புறவழிச்சாலைகள் அமைத்தல், சாலைகள் புதுப்பிப்பு, மற்றும் சாலைப் பராமரிப்பு போன்றவை, தனியாரிடமே ஒப்படைக்கப் படுகின்றன. பெரும் தொகை கொடுக்கும் ஒப்பந்தக் காரர்களுக்கு மட்டுமே டெண்டர் வழங்கப் படுகிறது.

இதன் மூலம், அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும், கோடிக் கணக்கில் கமிசன் கிடைக்கிறது. இதனால், கமிசனைக் கொடுத்து, வேலையைச் செய்யும் காண்டிராக்ட்காரர்கள், தரமற்ற சாலைகளைப் போடுகின்றனர்.

சிறிய மழை வந்தாலே, ரோடுகள் எல்லாம் பெயர்ந்து, ஆங்காங்கே குண்டும் குழிகளுமாக உருவாகின்றன.  இந்த சாலைகளின் பராமரிப்பிற்காக, அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது.

தற்போது, பழனி கோட்டத்தில் உள்ள 450 கி.மீ. நீளமுள்ள சாலைகளை, பராமரிப்பதற்காக, அந்தப் பணிகளை, தனியாரிடம் விட அரசு முடிவு செய்திருக்கிறது. மேலும், இந்த பராமரிப்பு பணிகளுக்கான ஒப்பந்தத்தை 5 ஆண்டுகள் வரை, நீட்டித்து, தனியாரிடம் ஒப்படைக்க உள்ளது தமிழக அரசு.

இதன் மூலம், கோடிக் கணக்கில், அரசியல்வாதிகள், ஆட்சியில் உள்ளவர்கள் என, ஏராளமானவர்களுக்கு கமிசன் கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஆனால், இந்த சாலைப் பராமரிப்பு பணியை நம்பி வாழும் சாலைப் பணியாளர்கள் தான், தங்கள் வேலை வாய்ப்பு பறி போய் விடுமோ, என்று கலக்கத்தில் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ROAD CONTRACT IN PRIVATE


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->