ராமர் கோவில் திறப்பு - ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு அழைப்பு! - Seithipunal
Seithipunal


அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்துகொள்ள, இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள ராமர் கோவிலை, வரும் 22-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்.

ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொள்ள உள்ளனர். 

இந்த விழாவில் பங்கேற்க வருமாறு ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை சார்பாக சங் பரிவார் அமைப்பினர், நாடு முழுவதும் உள்ள தலைவர்களுக்கும், முக்கிய பிரமுகர்களுக்கு, திரைப் பிரபலங்கள் உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுத்தது வருகின்றனர்.

இந்நிலையில், சென்னையில் இன்று இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினை நேரில் சந்தித்த தமிழக பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா, துணை தலைவர் வெங்கட்ராமன் ஆகியோர் அழைப்பிதழ் வழங்கி, கும்பாபிஷேக விழாவில் பங்கேற்குமாறு கேட்டு கொண்டனர்.

ராமர் கோயில் கும்பாபிஷேக அழைப்பிதழை அஸ்வின் பெற்றுக்கொண்டார். முன்னதாக கிரிக்கெட் வீரர்கள் சச்சின், கோலி மற்றும் தோனி ஆகியோருக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ram Temple Ayodhya invite Ravichandran Ashwin


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->