ஒரு சீட் கூட அவர்களுக்கு கிடைக்காது... ஆந்திராவில் நாங்க மட்டும் தான் - அமித் ஷா பரபரப்பு பேச்சு.! - Seithipunal
Seithipunal



இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் மக்களவைத் தேர்தல் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பல்வேறு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் ஆந்திர மாநிலத்தில் மே 13ஆம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு பதிவு நடைபெற உள்ளது. 

இதே நாளில் அம்மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு பதிவு நடைபெற உள்ளது. ஆந்திரா பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு பதிவு ஒரே கட்டமாக நடைபெற உள்ளதால் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தேர்தல் பரப்புரைக்காக ஆந்திர பிரதேச மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவர், 

இந்த இடத்தில் சுமார் 50,000 மேற்பட்டோர் உள்ளனர். இதுவே ஒட்டுமொத்த ஆந்திர பிரதேசம் மாநிலமும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாக இருப்பதை எடுத்துக்காட்டுகிறது. 

இங்கு தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி அடையும். ஆந்திர பிரதேச மாநிலத்தில் இந்தியா கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Amit shah says India alliance wont win single seat


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->