சென்னையை புரட்டி போட்ட கனமழை.. தேங்கிய மழை நீரால் பொதுமக்கள் கடும் அவதி..!! - Seithipunal
Seithipunal


சென்னையில் நேற்று இரவு முதல் பெய்து வரும் கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. கத்திப்பாரா மேம்பாலத்தில் கீழ் உள்ள சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியுள்ளது. அதேபோன்று வேப்பேரியில் சாலைகளின் இருபுறமும் மழைநீர் தேங்கியுள்ளது.

வண்ணாரப்பேட்டை பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையத்திற்கு வெளியே தேங்கிய மழை நீரால் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகினர். மேலும் செம்பியம், கொளத்தூர், தலைமைச் செயலகம், மைலாப்பூர், கிண்டி, தி.நகர் உள்ளிட்ட இடங்களில் மரங்கள் சாலையில் விழுந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சென்னை வியாசர்பாடி ஜீவா சுரங்கப் பாதையில் தேங்கி நிற்கும் மழை நீரால் பொதுமக்கள் அவழியாக செல்ல முடியாமல் கடுமையான சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சுரங்கப் பாதையில் ஆள் உயர அளவுக்கு தேங்கியுள்ள மழை நீரால் வாகன ஓட்டிகள் செய்வது அறியாத தவித்து வருகின்றனர். அவழியாக செல்லும் போக்குவரத்து முழுவதுமாக துண்டிக்கப்பட்டதால் பேருந்துகள் இயக்கப்படவில்லை. சுரங்க பாதையில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rainwater has stagnated in many parts of Chennai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->