திருச்சி ரௌடியுடன் கூட்டு..! கள்ளத் துப்பாக்கி விற்ற போலீசார்..! வாங்கிய சென்னையின் முக்கிய பிரபலம்..!! கூண்டோடு சிக்கிய கதை..!!! - Seithipunal
Seithipunal


கடந்த ஜனவரி மாதம், திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள லாட்ஜில், துப்பாக்கிகளுடன் இருந்த, சென்னை போலீசார், பரமேஸ்வரன், திவ்ய பிரபாகரன் உள்ளிட்ட மூன்று பேரைப் போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து, 2 துப்பாக்கிகள், தோட்டாக்கள் ஆகியவை கைப்பற்றப் பட்டன. இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரித்து வருகிறது. இது தொடர்பாக, 6 பேர் கைது செய்யப் பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப் பட்டனர்.

இந்த விசாரணையின் போது, இந்த போலீசார் மற்றும் ரவுடி கலைமணி உள்ளிட்ட 6 பேரும், கடந்த 2012-ஆம் ஆண்டு முதல், துப்பாக்கி வியாபாரம் செய்து வந்தது தெரிய வந்தது. 

இதற்காக இவர்கள், மத்திய பிரதேசத்தில் இருந்து, கள்ளத்தனமாக தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளை வாங்கி வந்து ஒரு துப்பாக்கியை 2 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்துள்ளனர்.

இடையே, இந்த துப்பாக்கி விற்ற பணத்தைப் பிரிக்கும் விதத்தில், போலீசாருக்கும், ரவுடி கலைமணிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அதனை வைத்து, அந்த ரவுடியிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இவர்கள் இது வரை 11 துப்பாக்கிகள் விற்றுள்ளனர். அதை வாங்கியவர்களில் 4 பேர், சுட்டுக் கொல்லப் பட்டனர். மீதமுள்ள 7 துப்பாக்கிகள் யாரிடம் உள்ளது? என்று விசாரிக்கின்றனர்.

இவர்களில், சென்னையைச் சேர்ந்த முக்கிய வி்ஐபி ஒருவரும் துப்பாக்கி வாங்கியது தெரிய வந்தது. விரைவில் அவர் சிக்குவார், என்று சிபிசிஐடி வட்டாரம் தெரிவித்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police and rowdy in gun sale


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->