காது கிழியும் புலம்பல் சத்தம்.."கை காசு போட்டு வேலை செய்கிறோம்".. ரோந்து போலீசார் குற்றச்சாட்டு..!! - Seithipunal
Seithipunal


தமிழக முழுவதும் உள்ள காவல் நிலையங்களின் எல்லைகள் பிரிக்கப்பட்டு ரோந்து பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. ரோந்து பணி மேற்கொள்வதற்காக காவல்துறைக்கு இருசக்கர வாகனம் மற்றும் கார் போன்ற வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு வழங்கப்பட்ட வாகனங்களில் போலீசார் ரோந்து பணியை மேற்கொள்ள மாதந்தோறும் 35 லிட்டர் பெட்ரோல் வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் சமீப காலமாக அதிகப்படியான குற்றச் செயல்கள் அரங்கேறி வரும் நிலையில் மாதம்தோறும் வழங்கப்படும் 35 லிட்டர் பெட்ரோல் போதுமானதாக இல்லை என காவல்துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மோட்டார் வாகன பிரிவு துணை கமிஷனரிடம் கூடுதல் பெட்ரோல் வழங்கும் படி கோரிக்கை மனு அளித்தும் எந்த பலனும் இல்லை என ரோந்து போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர். தமிழக காவல் நிலைய எல்லைகளில் 24 மணி நேரமும் ரோந்து பணி அமைக்கப்பட்டுள்ளதால் சுழற்சி முறையில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறோம்.

அரசால் வழங்கப்படும் பெட்ரோல் 15 நாட்களுக்குக் கூட போதுமானதாக இல்லை எனவும் மீதமுள்ள நாட்களுக்கு எங்கள் சொந்த பணத்தை செலவு செய்து ரோந்து பணியை மேற்கொண்டு வருவதாகவும் காவல்துறையினர் புலம்புகின்றனர். சொந்த வாகனத்தில் ரோந்து பணி செல்லும் காவல் துறையினருக்கு பெட்ரோல் செலவுக்காக மாதம் வெறும் ரூ. 350 மட்டுமே தரப்படுவதாகவும் இதனை உயர்த்தி தர வேண்டும் எனவும் காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Petrol provided to patrolling police is not enough


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->