பெரம்பலூர் | பெரியார் சிலை சேதம்: கூலி தொழிலாளி அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்! - Seithipunal
Seithipunal


பெரம்பலூர், புதிய பேருந்து நிலையம் நுழைவு வாயில் அருகே அ.தி.மு.க சார்பில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகள் ஒரே பீடத்தில் வைக்கப்பட்டுள்ளது. 

அதில் பெரியார் சிலையின் இடது கை பெருவிரல் சேதப்படுத்தப்பட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அ.தி.மு.கவினர் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.கவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். 

அப்போது சிலையை சேதப்படுத்தியது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அ.தி.மு.க சார்பில் மனு அளிக்கப்பட்டது. 

இதனை தொடர்ந்து போலீசார் சிலையை சேதப்படுத்தியது தொடர்பாக அருகில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை சேகரித்து விசாரணை நடத்தினர். 

விசாரணையில் பெரம்பலூர் ஒகளூர் கிராமத்தைச் சேர்ந்த அனுசந்திரன் (வயது 37) என்ற கூலி தொழிலாளியை போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளனர். 

அவரிடம் நடத்திய விசாரணையில், மது போதையில் பெரியார் சிலை அருகே படுத்திருந்ததாகவும் பின்னர் சிலையின் விரலை பிடித்து எழ முயற்சி செய்த போது உடைந்து விட்டதாகவும் இதனால் தான் பயன்படுத்திய துண்டை வைத்து மறைத்து விட்டு சென்றதாகவும் அவர் ஒப்புக்கொண்டார். 

இது தொடர்பாக போலீசார் அனுசந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Perambur Periyar statue Damage laborer arrest


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->