சொந்த தொகுதியில் ஓபிஎஸ்-க்கு காத்திருக்கும் ஆப்பு.! என்ன விடயம்? ஏன் இந்த நிலைமை.!! துணை முதல்வரின் உண்மை முகம்..!!! - Seithipunal
Seithipunal


மறைந்த முதல்வர் ஜெயலலிதா, ஆண்டிபட்டி தொகுதியில், 15 ஆண்டுகளுக்கு முன்பாக, தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அது வரை, யாரும் சீந்தாமல் இருந்த அந்த ஊர், அதன் பிறகு, நட்சத்திர அந்தஸ்து பெற்றது.

உலகத்தரம் வாய்ந்த சாலைகள் அமைக்கப்பட்டன. தேனியில் அமைய வேண்டிய, மருத்துவக் கல்லுாரியை, ஆண்டிபட்டியில் தான் ஜெயலலிதா கட்டி திறந்து வைத்தார். மேலும், எண்ணற்ற மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றினார். அதனால், இன்றும், அந்தத் தொகுதி மக்கள், ஜெயலலிதாவைப் போற்றிக் கொண்டிருக்கின்றனர்.

அதே சமயம், முன்னால் முதல்வரும், இந்நாள் துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம், கடந்த முறை போடி தொகுதியில் போட்டியிட்டு வென்றார். அவரது சமுதாய மக்கள் இங்கு அதிகம் இருப்பதால், அவரை தேர்தலில் வெற்றி பெற வைத்தனர்.

ஆனால், இந்த தொகுதியின் அடிப்படைத் தேவைகளைக் கூட, இது வரை அவர் செய்து தரவில்லை, என்று அந்தப் பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஆனால், தேனியில் இருந்து போடி நகருக்குள் செல்லும் சாலை மிகக் குறுகியதாக உள்ளது. ஒரு கார் போனால் கூட, எதிரே வண்டி வந்தால், விலக முடியாது. ஏதாவது ஒரு வண்டியை, ரிவர்சில் தான் எடுக்க வேண்டி வரும். அந்த சாலையை மாற்றித் தரும்படி, அவர்கள் தந்த கோரிக்கை கேட்பாரற்று கிடக்கிறது.

அதே போல், போடி பேருந்து நிலையம் உட்பட, நகரத்தில் உள்ள சாலைகள் நடக்க கூட லாயக்கற்ற நிலையில் உள்ளன. அவ்வளவும், குண்டும் குழியுமாக உள்ளன. பேருந்து நிலையத்தைப் பார்த்தால், குமட்டும் அளவிற்கு, துர்நாற்றத்துடன் உள்ளது.

ஆனால், இது பற்றி, துணை முதல்வர் கண்டு கொள்ளவேயில்லை. எப்போதாவது, கட்சிக்காரர்களின் திருமண விழாவிற்கு, வந்து போவதோடு சரி. தொகுதிக்கென்று, செய்ய வேண்டிய அடிப்படை வசதிகளைக் கூட, அவர் செய்யவில்லை, என்று, போடி மக்கள் புலம்புகின்றனர்.

அடுத்த முறை, வாக்கு கேட்டு வந்தால், ஓ.பி.எஸ்-க்கு வாக்களிக்க மாட்டோம், என்று அவரது  சமுதாயத்தைச் சேர்ந்த தொகுதி மக்களே சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PEOPLE AGAINST OPS


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->