தேனி தொகுதியில் வேட்பாளர்கள் மாற்றம் - பன்னீர்செல்வத்தின் அறிவிப்பால் அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வருகிற 19 ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற் உள்ளதால் அரசியல் கட்சியினர் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பா.ஜ.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் டி.டி.வி தினகரனின் அ.ம.மு.க கட்சிக்கு திருச்சி மற்றும் தேனி என்று இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. 

அதில், தேனி மக்களவை தொகுதியில் தற்போது எம்.பி.யாக இருக்கும் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தேனி தொகுதியை அமமுகவிற்கு ஒதுக்கியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தேனி மக்களவை தொகுதியில் டி.டி.வி தினகரன் போட்டியிட உள்ளதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இன்று தேனியில் உள்ள தனது இல்லத்தில் தனது ஆதரவாளர்களை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

"டி.டி.வி. தினகரனுக்கு நன்றிக் கடனாக தேனி தொகுதியை விட்டுக்கொடுத்தோம். தேனி தொகுதியில் எனது மகன் ரவீந்திரநாத்தும், டி.டி.வி. தினகரனும் போட்டியிட விருப்பம் தெரிவித்தார்கள். டி.டி.வி தினகரன் ஆசைப்பட்டதால் அவருக்கு தொகுதியை விட்டுக்கொடுத்தோம். தேனி மக்களவைத் தொகுதியில் டி.டி.வி. தினகரனை அமோக வெற்றி அடைய செய்ய வேண்டும்" என்றுத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

panneer selvam announce theni constituency new candidate


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->