பெண்ணிடம் சிக்கிய ரூ.1½ லட்சம் பணம் - தீவிர விசாரணையில் பறக்கும் படை.! - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில், திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதியில் குணசேகர் தலைமையிலான பறக்கும் படையினர் நல்லூர் தேவாலயம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக பெண் ஒருவர் மது போதையில் வந்தார். மேலும், அவரது இடுப்பில் மூன்று கட்டுகள் பணம் வைத்திருந்தார். இது தொடர்பாக பறக்கும் படையினர் அவரிடம் விசாரித்தபோது அந்தப்பெண் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து அதிகாரிகள் அவரிடம் இருந்து பணத்தை வாங்கி எண்ணிப்பார்த்தபோது ரூ.1½ லட்சம் இருந்தது தெரியவந்தது. இந்தப்பணம் எப்படி கிடைத்தது என்று விசாரித்தபோது, தான் திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்தவர் என்றும், பண்ணாரி அம்மன் கோவிலில் பிச்சை எடுத்த பணம் என்றும் தெரிவித்தார். 

உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து மாநகராட்சி உதவி ஆணையாளர் தங்கவேல்ராஜனிடம் ஒப்படைத்து கருவூலத்தில் சேர்த்தனர். மேலும், மதுபோதையில் இருந்த பெண்ணை காப்பகத்தில் தங்க வைத்து விசாரித்து வருகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

one and half lakhs money seized in women


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->