மீண்டும் வலுக்கும் ஹைட்ரோகார்பனுக்கு எதிரான போராட்டம்.! துவங்கிய போராட்டம்., காத்திருப்பில் கிராம மக்கள்.!! - Seithipunal
Seithipunal


திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருக்கரவாசலை மையமாக கொண்டு நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள காரியப்பட்டினம் வரையிலான பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்காக மத்திய அரசானது வேதாந்த நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. 

ஹைட்ரோகார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிடக்கோரியும்., உத்தரவை திரும்ப பெறக்கோரியும் குடியரசு தினம் அன்று உண்ணாவிரத போராட்டத்தை துவக்க முடிவு செய்யப்பட்டு., குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் உண்ணா விரத போராட்டமானது நடத்தப்பட்டது. 

அந்த உண்ணா விரோத போராட்டமானது அனுமதியின்றி நடைபெறுகிறது என்ற காரணத்தால்., போராட்டத்தில் பங்கேற்ற 200 பேரின் மீது காவல் துறையினர் கைது செய்தனர். அந்த வகையில்., திருக்காரவாசலில் நடைபெற்ற விவசாயிகளின் உண்ணாவிரத போராட்டம் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையில் நடைபெற்றது. 

இந்த போராட்டத்தின் முடிவில் மத்திய அரசானது ஹைட்ரோகார்பன் போராட்டத்தை கைவிடும் வரை போராட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்த நிலையில்., அவர்களுக்கு ஆதரவாக பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட சுமார் 100 பேர் ஈடுபட துவங்கினர்.  

இந்த போராட்டமானது நேற்று மாலையளவில் தொடங்கி தற்போது வரை பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று கிராமத்தினர் அங்கேயே படுத்துறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும்., போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசு மற்றும் வேதாந்தா நிறுவனத்திற்கு எதிரான கோஷங்களை தொடர்ந்து எழுப்பிய வண்ணம் உள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

once again stike starting about to pan hydrocarbon process in thiruvarur district


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->