ரேஷன் ஸ்மார்ட் கார்டு கிடைக்காததால் நேர்ந்த பரிதாபம்.,அதிகாரி காலில் விழுந்து மூதாட்டி கதறல்..! - Seithipunal
Seithipunal


திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த உப்பூர் காசாடிக்கொல்லை பகுதியில்  கட்டிட வசதி இல்லாததால் ரேஷன் கடை அமைக்கப்படவில்லை.எனவே மக்கள் சுமார் 4 கிமீ தூரத்தில் உள்ள முத்துப்பேட்டைக்கு சென்று ரேஷன் பொருட்கள் வாங்கி வந்துள்ளனர்.

இதையடுத்து மக்கள் தங்கள் பகுதியில் ரேஷன் கடை அமைக்க கேட்டதற்கு கட்டிட வசதி இருந்தால் அமைத்து கொடுப்பதாக வட்ட வழங்கல்துறை அதிகாரிகள் உறுதி அளித்தனர். 

மக்களே பணம் திரட்டி உள்ளூரில் ரேஷன் கடைக்கான புதிய கட்டிடம் கட்டி அதன் திறப்புவிழா இன்று  நடந்தது. 

அப்போது அதே பகுதியை சேர்ந்த தங்கம்மாள் என்ற மூதாட்டி,  ரேஷன் ஸ்மார்ட் கார்டு வராததால் சாப்பாட்டுக்கு கஷ்டப்படுவதாக கூறி திடீரென திறப்பு விழாவிற்கு வருகை தந்த திருத்துறைப்பூண்டி வட்ட வழங்கல் அலுவலர் தங்கமணி  காலில் விழுந்து கதறி அழுதார்.

  பதறிப்போன அதிகாரி விசாரணை நடத்திய போது, அந்த மூதாட்டிக்கு  ஸ்மார்ட் கார்டு தயாராகிவிட்ட நிலையிலும் இதுவரை அவரிடம் வந்து சேரவில்லை என்பது தெரியவந்தது.

தங்கம்மாளுக்கு உடனடியாக ஸ்மார்ட் கார்டு கிடைக்க நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தி உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

old lady falled on the knees of officer and cry for asking ration smart card


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->