லைசென்ஸ் வேண்டாம்.. ஆர்.சி புக் வேண்டாம்.. இன்சுரன்ஸ் கூட வேண்டாம்.. ஆனால் இது மட்டும் வேண்டும் - வாகன ஓட்டிகளுக்கு குதூகலமூட்டும் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நடக்கும் விபத்துகளை சமாளிக்க ஒரிஜினல் லைசென்ஸ், இன்சுரன்ஸ், ஆர்.சி புக் போன்றவற்றை பயணத்தின் போது வாகன ஓட்டிகள் வைத்திருக்க வேண்டும் என்ற அறிவிப்பை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு வெளியிட்டது.

வாகன தணிக்கையில் ஈடுபடும் போக்குவரத்து காவலர்களிடம் அசல் ஆவணங்களை சமர்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அப்படி இல்லை என்றால் டிஜிட்டல் முறையில் உள்ள ஆவணங்களை கூட காண்பிக்கலாம் என்று ஒரு வாசகம் சேர்க்கப்பட்டிருந்தது.

இதனை நடைமுறைப்படுத்த உத்தரவிட்டு இருந்தும், சில இடங்களில் அசல் ஆவணங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படுவதாக புகார் வந்தது.

டிஜிட்டல் ஆவணங்கள் என்பது லைசென்ஸ், இன்சுரன்ஸ், ஆர்.சி புக்  போன்றவற்றை ஸ்கேன் செய்து மத்திய அரசின் அதிகாரபூர்வ தரவு தளமான டிஜிலாக்கர் எனப்படுவதில் பதிவேற்றம் செய்வதாகும். இந்த நடைமுறையை செய்து முடித்த பின், டிஜிலக்கார் செயலியை மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து, நமது கணக்கின் உள்ளே  சென்றாலே நாம் பதிவேற்றம் செய்த ஆவணங்கள் புகைப்படங்களாக இருக்கும்.

போக்குவரத்து காவலர்கள் கேட்கும் பொழுது அசல் ஆவணகளுக்கு பதிலாக மொபைலில் டிஜிலாக்கர் செயலியில் உள்ள அந்த புகைப்படங்களை காண்பித்தாலே போதுமானது. அசல் ஆவணங்களை எடுத்துச்செல்ல தேவையில்லை.

ஆனால் பல இடங்களில் இந்த நடைமுறை பின்பற்றப்படுவதில்லை என்று புகார் வந்துள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் இனிமேல் ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ் மற்றும் இதர ஆவணங்களை கட்டாயம் கையில் வைத்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. டிஜிட்டல் முறையில் வைத்திருந்தாலே போதுமானது. அதை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும்' என்று உத்தரவிட்டுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

No need to carry physical copies of driving licence, other vehicle documents says Madras HC


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->