எல்லாம் போச்சு ,கதறி அழுத கலா மாஸ்டர், பார்ப்போரை பதறவைக்கும் வீடியோ .! - Seithipunal
Seithipunal


திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி, சிறுநீர் தொற்று மற்றும் வயதுமுதிர்வின் காரணமாக உடல்நலம் குறைவு ஏற்பட்டு கடந்த இரண்டு வாரங்களாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில் கடந்த செவ்வாய்கிழமை மாலை சிகிச்சைபலனின்றி அவர் உயிரிழந்தார்.

மேலும் கருணாநிதியின் உடல் மக்கள் பார்வைக்காக ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டு, பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் பிரபலங்களும் அஞ்சலி செலுத்தினர்.

பின்  ராணுவ மரியாதையுடன் கருணாநிதியின் இறுதி ஊர்வலம்  ராஜாஜி அரங்கத்திலிருந்து  தொடக்கி மெரினா கடற்கரை வந்தடைந்தது .பின் முப்படைகளின் அரசமரியாதையுடன் கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் கருணாநிதிதியின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள முடியாத  கலாமாஸ்டர் கனடாவில் இருந்து கலைஞரைக் கடைசியாக காணமுடியவில்லையே என தனது ஆதங்கத்தை கண்ணீர் மல்க வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

English Summary

kala master cried for karunanidhi dead


கருத்துக் கணிப்பு

உலக கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணி...கருத்துக் கணிப்பு

உலக கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணி...
Seithipunal