ஈரோட்டில்., செல்போனில் பேசியபடி கிணற்றுக்குள் விழுந்த பெண்.! காப்பாற்ற சென்ற இருவரும் தத்தளித்த சோகம்.!! தத்தளித்த காரணத்தை கேட்டு அதிர்ச்சியில் காவல் துறையினர்.!!  - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலையை அடுத்துள்ள சின்னபிடாரியூர் பகுதியில் வசித்து வருபவர் சங்கீதா. இவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். அதே பகுதியை சார்ந்தவர் இளைஞர் கதிரேசன் மற்றும் சுப்பிரமணி (வயது 60).

சங்கீதா அவரது வீட்டின் அருகே உள்ள கிணற்றுக்கு அருகில் இருந்த படி அலைபேசியில் தனது வீட்டார்களிடம் பேசிக்கொண்டு இருந்துள்ளார். அந்த சமயத்தில் அவர் எதிர்பாராத விதமாக கிணற்றுக்குள் விழுந்துள்ளார். 

இதனை கண்ட இளைஞர் கதிரேசன் மற்றும் முதியவர் சுப்பிரமணி உடனடியாக அங்குள்ளவர்களுக்கு தகவல் தெரிவித்து அவரை காப்பாற்றுவதற்கு கிணற்றுக்குள் குதித்தனர். 

அந்த கிணற்றில் படி ஏதும் இல்லாத மொட்டை கிணறு என்பதால் பெண்ணை காப்பாற்ற குதித்த இவர்வரும் பெண்ணை காப்பாற்றி நீரில் தத்தளித்தனர். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக சம்பவம் குறித்து தீயணைப்பு துறையினருக்கும்., காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். 

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் மூவரையும் மீட்டனர்., சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் சங்கீதா கிணற்றுக்குள் விழுந்த காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.   


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in erode a girl attempt suicide to jump well


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->