காணும் பொங்கலில் காணாமல் போன கணவன்கள்!! பரிதவித்த மனைவிகளிடம் காவல்துறை ஆறுதல்!! - Seithipunal
Seithipunal


போகி, தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல் வரிசையில் பொங்கல் நிறைவு நாளான நேற்று சுற்றமும், நட்பும் சந்தித்து, தங்களது மகிழ்ச்சிகளையும், வாழ்த்துக்களையும் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளும் கரிநாள் என்கிற காணும் பொங்கல் தமிழர்களால் கொண்டாடப்பட்டது.

அனைத்து சொந்தங்களையும் ஒருங்கிணைந்து காணும் நாள் என்பதால் இதனை காணும் பொங்கல் என்பர். இந்த விடுமுறை நாளில் கிராமத்தில் இருப்பவர்கள் சொந்தங்களை கண்டாலும், நகரத்தில் உள்ள தமிழர்கள் குடும்பத்துடன் திரைப்படம் காண செல்வது, கடற்கரை அல்லது பூங்கா போன்ற சுற்றுலா தளத்திற்கு செல்வதை வழக்கமாக கொண்டிருப்பர். 

கிராமங்களில் இந்த நாளில் வயது வித்தியாசம் இன்றி கபடி, கயிறு இழுத்தல், வழுக்கு மரம் , உறியடித்தல், என அனைத்து போட்டிகளிலும் கலந்து கொள்வது வழக்கம். மிகவும் மகிழ்சியாக சொந்தங்களுடன் இந்த நாளை செலவிடுவதை அனைவரும் விரும்புவர். 

இந்த காணும்பொங்கல் நாளில் நேற்று சென்னை மெரினா கடற்கரையில் கணவன் மனைவி, சுற்றங்கள் என குடும்பத்துடன் உல்லாசமாக இருக்க சென்ற இடத்தில் சிலர் கணவனை மற்றும் மனைவியை தொலைத்து விட்டு காவல் துறையினரை நாடியுள்ளனர். 

கணவனை காணவில்லை என 7 பெண்களும், மனைவிகளை காணவில்லை என 9 ஆண்களும் போலீசில் புகார் அளித்துள்ளனர். இது கேட்பதற்கு வினோதமாக இருந்தாலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இது மிகவும் வேதனை தரக்கூடிய விஷயமாகும். இதற்கு காவல் துறையினர் 'கவலைப்படாதீர்கள் கிடைத்து விடுவார்கள்' என குடும்பத்தினரிடம் கூறி அனுப்பியுள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

husband and wife missing on merina


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->