கொட்டி தீர்க்கும் கனமழை: என்எல்சி சுரங்கத்தில் பணிகள் இல்லை! அப்போ மின்சாரம்?  - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

குறிப்பாக நேற்று இரவு முதல் கடலூர் மாவட்டத்தில் சிதம்பரத்தில் 232 மில்லி மீட்டர் மழையும் புவனகிரி 144 மில்லி மீட்டர் மழையும், ஒத்தவச்சேரி 130 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. 

மாவட்ட முழுவதும் பரவலாக பெய்து வரும் கனமழையின் காரணமாக தற்போது என்எல்சி நிலக்கரி சுரங்கத்தில் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணிகளும் மேல்மண் நீக்கும் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளது. 

இருப்பினும் மின் உற்பத்தி பாதிக்கப்படவில்லை. காரணம் ஏற்கனவே வெட்டி வைக்கப்பட்டிருந்த நிலக்கரியிலிருந்து மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 

ஆனால் புதிதாக நிலக்கரி வெட்டி எடுக்கும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட முழுவதும் தொடர் மழை காரணமாக விவசாயிகள் தற்போது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Heavy rain NLC mine No work


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->