கனமழை எதிரொலி: விமான சேவை பாதிப்பு! - Seithipunal
Seithipunal


தென் இலங்கையில் கடற்கரையை ஒட்டிய வங்க கடல் பகுதிகளின் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று முதல் 22 ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

குறிப்பாக தென் மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கிடையே திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நேற்று முதல் கன மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் சூழ்ந்துள்ளது. 

இதனால் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களுக்கும் மிக கனமழைகான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றங்கரை ஓரம் கிராமங்களில் வசிக்கும் பொது மக்கள் குளிக்கவும் செல்லாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து மோசமான வானிலை நிலவுவதால் தூத்துக்குடி செல்ல வேண்டிய 2 விமானங்கள் மதுரையில் தர இயங்கியது. 

அதேபோல் தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்ல இருந்த விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் அவதியடைந்துள்ளனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

heavy rain airline services affected


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->