ரூ.30 லட்சம் மானியம் : விண்ணப்பங்கள் உடனே வரவேற்க்கப்படுகின்றன - எளிதாக அணுக வேண்டிய வழிமுறை.! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்களுக்கு ஆழ்கடல் சூரை மீன்பிடிப்பு மற்றும் செவுள்வலை படகுகள்கட்டிட 50 விழுக்காடு அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை மானியமாக வழங்கும் திட்டத்தின்கீழ் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அண்மைக்கடல் பகுதியில் அதிகரித்து வரும் மீன்பிடி அழுத்தத்தை குறைத்திடவும், ஆழ்கடல் பகுதியில் செறிந்துள்ள மீன்வள ஆதாரங்களை முறையாக பயன்படுத்திடவும், தூண்டில் மூலம் சூரை மீன்பிடிப்பு மற்றும் செவுள்வலை பயன்படுத்தும் புதிய மீன்பிடி விசைப்படகினை கட்டும் மீனவர்களுக்கான ஒரு புதிய திட்டத்தினை அறிவித்து தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தின் கீழ், தூண்டில் மூலம் சூரை மீன்பிடிப்பு மற்றும் செவுள்வலை பயன்படுத்தும் புதிய மீன்பிடிவிசைப்படகினை கட்டிட படகொன்றிற்காகும் செலவினத்தில் 50 விழுக்காடு அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரைமீனவர்களுக்கு மானியமாக வழங்கப்படும்.

தமிழகத்தை சார்ந்த முழு நேரமீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் அதிகபட்சம் 6 பேர் கொண்ட குழுவாகவோ அல்லது மீனவர் கூட்டுறவு சங்கங்கள் அல்லது தனி நபராகவோ இத்திட்டத்தின்கீழ் பயன் பெறலாம்.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெறவிண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்பப் படிவங்களை மீன்வளத்துறையின் இணையதளத்தில் இருந்து கட்டணமின்றி பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அல்லது விண்ணப்ப படிவங்களை மீன்துறை உதவி இயக்குநர், தூத்துக்குடி அலுவலகத்தில் அலுவலக நாட்களில் நேரில் விலையின்றி பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பதாரர் மீன்துறை இணையதளத்தில் உள்ள விரிவான வழிகாட்டு நெறிமுறைகளின்படி பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மீன்துறைஇயக்குநர், கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை ஒருங்கிணைந்த கட்டிடங்கள், 3-வது தளம், கால்நடை மருத்துவமனை வளாகம், 571, அண்ணா சாலை, நந்தனம், சென்னை-600 035 என்ற முகவரிக்கு பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லதுநேரடியாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்துடன் கட்டுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள சூரைமீன்பிடி படகின் வரைபடம் தகுதிவாய்ந்த கப்பல்/மீன்பிடிகலன் கட்டுமான வரைவாளரிடமிருந்து பெற்று அசலாக இணைக்கப்பட வேண்டும். பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு மாநில அளவிலான பதிவுஎண்ணுடன் கூடிய ஒப்புகை சீட்டு விண்ணப்பதாரருக்கு அனுப்பப்படும்.

மேலும், இத்திட்டம் தொடர்பான கூடுதல் விபரங்கள் மற்றும் தெளிவுரைகளுக்கு மீன்துறை உதவி இயக்குநர்,116, வடக்கு கடற்கரை சாலை மீன்வளத்துறை வளாகம், தூத்துக்குடி (0461-2320458) அலுவலகத்தினை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

govt announced subsidy for ship


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->