பாம்பன் பாலம் பற்றி, மக்களுக்கு ஒரு இனிய செய்தி….! - Seithipunal
Seithipunal


 

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பாம்பன் பாலம், தமிழகத்தில் மிகப் பிரபலமானது. இந்தியாவின் முதல் கடல் பாலம் என்ற பெருமை இதற்கு உண்டு.

இந்தப் பாலத்தைக் கடந்து தான் ராமேஸ்வரம் செல்ல வேண்டும். பெரும்பாலும், யாத்ரீகர்களும், சுற்றுலாப் பயணிகளும், ரயிலிலேயே பாம்பன் பாலத்தைக் கடக்க விரும்புவார்கள்.

காரணம், கடலுக்கு வெகு அருகில், அமைக்கப்பட்ட ரயில் பாலம் இது. ரயிலில் செல்லும் போது, 2 கி.மீ. துாரத்திற்கு, ரயில் பாலத்தைக் கடக்கும் போது, கடலை எட்டிப் பார்ப்பது இனிமையான அனுபவம். நெருங்கி வரும் கடல் அலைகளும், கடலுக்குள் துள்ளித் திரியும் மீன்களும், பார்ப்பதற்கு ரம்யமாக இருக்கும். எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது.

நுாறாண்டைக் கடந்த இந்த பாலத்தில், சமீப காலமாக, இந்தப் பாலம் பழுதடைந்துள்ளதால், இந்த வழியாக ராமேஸ்வரம் செல்லும், அனைத்து ரயில்களும் மண்டபம் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப் படுகின்றன. இதனால், பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும், பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

மேலும், இங்குள்ள ஷெர்ஜர் துாக்குப் பாலம், சேதம் அடைந்துள்ளதால், இந்த வழியாகக் கப்பல்களும் செல்ல இயலவில்லை.

தற்போது, ஏராளமான ஆட்களைக் கொண்டு, இந்தப் பாலத்தை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

வரும் பொங்கல் முதல், மீண்டும், இந்தப் பாலத்தின் வழியாக ரயில் விடப்படும், என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

good news for public pertaining to Pamban bridge


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->