ஓபிஎஸ் மற்றும் அவரது உறவினர்களிடம் ஏராள பணம்..? ஓபிஎஸ், பொன்.ராதாகிருஷ்ணன் பெயரால் மோசடி - அம்பலமான சதிவேலை..! - Seithipunal
Seithipunal


குமரிமாவட்டம் பொன்மனை பகுதியைசேர்ந்த பெண் ஒருவர், கடந்த சில வாரங்களுக்கு முன்பு குறைந்த வட்டியில் கடன் வழங்குவதாக போட்டிருந்த அறிவிப்பை கண்டு, அதில் இருந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டார்.

அதில் பேசியவர்கள், நாங்கள் கோடிக்கணக்கான ரூபாய் அரை பைசா வட்டிக்கு கடன் கொடுக்கிறோம். கடனுக்குரிய ஆவணங்கள் மட்டும் கொடுக்க வேண்டும், பணத்தை மாதம்தோறும்திருப்பி செலுத்தலாம் என கூறியுள்ளனர்.

இதை நம்பிய அந்த பெண், அவர்கள் கேட்ட ஆவணங்களை கொடுத்து 10 ஆயிரம்ரூபாய் கமிஷனாகவும் கொடுத்துள்ளார். இதை அறிந்த அப்பகுதியில் உள்ள பலர்,அதிக தொகை கடன் கேட்டு கமிஷன் தொகையும், ஆவணங்களையும் கொடுத்துள்ளனர்.

பணம் கடன் கொடுப்பதாக கூறியவர்களிடம் பணம் எங்கிருந்து வருகிறது என பொதுமக்கள் கேட்டபோது, துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அவரது உறவினர்களிடம் ஏராளம் பணம் உள்ளது. அதை அவர்கள் வட்டிக்கு விடுவதாக கூறி உள்ளனர்.

மேலும் மத்திய அமைச்சர் ராதாகிருஷ்ணனின் உறவினர் ஒருவரிடம் தங்களுக்கு தொடர்பிருப்பதாகவும், அவர் மூலம் அரசு வேலை வாங்கி தருவதாகவும் கூறி நம்ப வைத்துள்ளனர். இதனால் பொதுமக்கள் அவர்களைவரவழைத்து பலருக்கு அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இதை வைத்து அந்த நபர்கள் பொன்மனை, பேச்சிப்பாறை பகுதிகளில் பல லட்சம் ரூபாய் வரை பொதுமக்களிடம் வசூலித்து உள்ளனர். பணம் மற்றும் ஆவணங்களை அவர்கள் பெற்று கொண்ட பின்னர், அவர்களிடம் இருந்து எந்த தகவலும் இல்லை.

இதனால் பொதுமக்கள் சந்தேகம் அடைந்தனர். இந்த நிலையில் பொன்மனையை சேர்ந்த பிரதீப் என்பவர் கடன் வழங்குவது சம்பந்தமாக வெளியிட்டிருந்த வேறொரு அறிவிப்பை பார்த்து அதில் போட்டிருந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டார்.

அதில் பேசிய நபர் சொத்து ஆவணம் மற்றும்25 ஆயிரம் ரூபாய் கமிஷனாக கேட்டுள்ளார்.இந்த பணத்தை கொடுக்க வியாழனன்று வீரப்புலிக்கு வருமாறு கூறினார். இதையடுத்து பணத்துடன் வீரப்புலிக்கு சென்ற பிரதீப், பணம் கேட்ட நபர்கள் ஏற்கனவே தங்களை ஏமாற்றியவர்கள் என தெரிந்ததும் அவர்கள் இருவரையும் காரில் ஏற்றி பொன்மனைக்கு கொண்டு வந்தார்.

அங்கு பாதிக்கப்பட்ட மக்கள் அவர்கள் இருவரையும் சுற்றி வளைத்து தாக்கினர். அவர்களிடம் விசாரித்ததில் ஒருவர்மேலப்பாளையத்தை சேர்ந்த சுப்பிரமணியன் (55), சிறை வார்டன் என்றும் மற்றொருவர் ஆரல்வாய்மொழியை சேர்ந்த மகேஷ் (52) என்றும் தெரிவித்தனர்.

இதையடுத்து அவர்கள் இருவரையும் பொதுமக்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தாங்கள் ஏமாற்றப்பட்டது குறித்தும் புகார் அளித்தனர். ஆனால் காவல் துறையினர் மக்களிடம் புகாரை வாங்காமல் அவர்கள் இருவரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க முயன்றனர்.

இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, தங்கள் ஆவணங்களையும், பணத்தையும் திருப்பி வாங்கி தர கேட்டனர். இதையடுத்து காவல் துறையினர் அவர்கள் இருவரிடமும் விசாரணை நடத்தினர்.

அதில் அவர்கள் இருவரும், மதுரையை சேர்ந்த சிலரிடம் பணம் மற்றும் ஆவணங்களை ஒப்படைத்ததாகவும், அவர்கள் தங்களை ஏமாற்றி விட்டதாகவும் தெரிவித்தனர்.

மேலும் பொதுமக்களிடம் வாங்கிய பணம் மற்றும் ஆவணங்களை திங்களன்று ஒப்படைப்பதாகவும் தெரிவித்தனர். அதற்கு பொதுமக்கள் சம்மதித்ததையடுத்து காவல் துறையினர் அவர்கள் இருவரிடமும் எழுதி வாங்கி கொண்டு விடுவித்தனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

forgery implemented by ops name


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->