ரூ.908 கோடி நிலக்கரி ஊழல்.. "ஆற்காடு வீராசாமி" மறந்துட்டீங்களா.. ரவுண்டு கட்டிய தங்கமணி..!! - Seithipunal
Seithipunal


அதிமுக ஆட்சி காலத்தில் மின்சார துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்த தற்போதைய குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கமணி இன்று நாமக்கலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர் "நான் மின்சாரத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் நிலக்கரி வாங்கியதில் ரூ.908 கோடி ஊழல் நடைபெற்ற செய்தி வெளியாகியுள்ளது.

இதுகுறித்து நான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன். நிலக்கரி வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதாக வெளியான செய்தியில் துளியும் உண்மை இல்லை. கடந்த மார்ச் 3ம் தேதி தங்கமணி விசாகப்பட்டின துறைமுகத்தில் இருந்து நிலக்கரி கொண்டு வந்ததில் ரூ.908 கோடி ஊழல் நடைபெற்றதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது.

அது குறித்து விளக்கம் அளிக்கவே இந்த செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தியுள்ளேன். கடந்த 2019 ஆம் ஆண்டு முழு விளக்கங்களை தெரிவித்திருந்தேன். கடந்த 2000ம் ஆண்டில் திமுக ஆட்சியில் தான் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து நிலக்கரி கொண்டுவர டெண்டர் விடப்பட்டது. 

கடந்த 2016 ஆம் ஆண்டு நான் மின்சார துறை அமைச்சராக பதவியேற்ற பிறகு நீதிமன்றம் சென்று விசாகப்பட்டினத்தில் இருந்து நிலக்கரி கொண்டுவரும் டென்டரை ரத்து செய்யப்பட்டது.

நான் ரூ.908 கோடி ஊழல் செய்து விட்டதாக தவறான செய்தியை வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக நான் ஏற்கனவே நீண்ட விளக்கத்தை அளித்துள்ளேன். தமிழக ஆளுநரிடமும் இதுகுறித்து மனு அளித்துள்ளேன். இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையால் விசாரிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அரசு அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே நிலக்கரி ஊழலுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. நிலக்கரி ஊழல் தொடர்பான வழக்கு 2001 முதல் 2019 வரை என பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இந்த வழக்கை தெரிந்து போட்டார்கள்..? அல்லது தெரியாமல் போட்டார்கள்..? என்று தெரியவில்லை. இந்த விவகாரம் முதலமைச்சரின் கவனத்திற்கு சென்றதா என்று தெரியவில்லை.

ஏனெனில் கடந்த 2006 முதல் 2011 வரை ஆட்சியில் இருந்தது திமுக தான். அப்போதைய மின்சாரத்துறை அமைச்சராக இருந்தவர் ஆற்காடு வீராசாமி என்பது ஞாபகம் இருக்கிறதா என்று தெரியவில்லை. திமுக ஆட்சியில் இருந்ததை மறந்து விட்டு ஊழல் என லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்துள்ளதா..? என எனக்கு தெரியவில்லை. கடந்த 2013 முதல் 2016 ஆம் ஆண்டு வரை என்று என் மீது குற்றம் சாட்டியுள்ளனர். அதில் துளி அளவு கூட உண்மை இல்லை என்பதை மீண்டும் மறுக்கிறேன். பொய் செய்தி வெளியிட்ட அனைத்து பத்திரிகை மீதும் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்வேன், நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்வேன்" என செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Exminister Thangamani explains about the coal scam


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->