முன்னாள் டிஜிபிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை உறுதி  - Seithipunal
Seithipunal


விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் 2023, ஜூன் 16-ஆம்தேதி பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் ஓய்வு பெற்ற டிஜிபி ராஜேஷ் தாசுக்கு  இரு பிரிவுகளின் கீழ் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையை  வழங்கியது. இதனை எதிர்த்து முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் ராஜேஷ்தாஸ்  மேல்முறையீடு  செய்தார்.   விசாரணையை வேறு மாவட்டத்துக்கு மாற்றக் கோரி  தாக்கல் செய்த ராஜேஷ்தாஸ் மனுவை  ஜனவரி 9 ஆம் தேதி சென்னை ஐகோர்ட்  தள்ளுபடி செய்தது

டிஜிபி ராஜேஷ்தாஸ் பல முறை  ஆஜராகாத நிலையில்,  அவரது வக்கீல் ஆஜராகி, வாதிட கால அவகாசம் கோரினார். ஆனால், நீதிமன்றம் மறுத்து விட்டது.  பிப்ரவரி 1-ஆம் தேதி ராஜேஷ்தாஸ் நேரில் கண்டிப்பாக 
 ஆஜராக உத்தரவிட்டது.

இதையடுத்து பிப்ரவரி 1-ஆம் தேதி விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் ராஜேஷ்தாஸ் ஆஜரானார். அவருடைய தரப்பு வாதங்களை  முன்வைத்து ராஜேஷ்தாசே வாதாடினார். இதைத் தொடர்ந்து பிப்ரவரி 7-ஆம் தேதி வரை உத்தரவிட்டார்.

முதன்மை மாவட்ட நீதிபதி ஆர். பூர்ணிமா தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் வழங்கிய 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ex-DGP sentenced to 3 years in jail


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->