தைப்பூச திருவிழா: தேரோட்டத்தில் தேர் கவிழ்ந்து விபத்து! அலறியடித்து ஓடிய பக்தர்கள்! - Seithipunal
Seithipunal


ஈரோடு, கொண்டையம்பாளையம் கிராமத்தில் புகழ்பெற்ற பொன்மலை ஆண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருடம் தோறும் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெறும். 

அதன்படி இன்று கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு தேரோட்டம் தொடங்கியது. இந்த தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

வீதியில் உலா வந்த தேர் வளைவில் திரும்பும்போது சாலையோரம் இருந்த குழியில் தேர் சக்கரம் சிக்கிக்கொண்டு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

தேர் கவிழ்ந்ததும் உடனடியாக அங்கிருந்த பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்ததில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த ஒரு காயமும் ஏற்படவில்லை. 

இதனை அடுத்து மீட்பு படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜேசிபி இயந்திரம் மூலம் தேரை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

தேரோட்டம் என்பதால் அந்த பகுதியில் முன்னெச்சரிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Erode thaipusam ther accident


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->