பாஜகவிற்கு உதவி செய்யவே திமுக, காங்கிரசுடன் கூட்டணி!! தினகரன் அதிரடி!! - Seithipunal
Seithipunal


''முக ஸ்டாலின் பாஜகவுக்கு உதவி செய்யும் நோக்கில், பிரதமராக ராகுலை முன்மொழிந்தாரோ என சந்தேகம் இருக்கிறது. கடந்த தேர்தலில் காங்கிரஸ் டெபாசிட் இழக்க காரணம் திமுக தான்.

 

தமிழக நலனை பாதுகாக்க, இங்குள்ள மாநிலகட்சிகள் வலுவானால்தான் முடியும். ஒருசில மாநிலக்கட்சிகளோடு பேசிக்கொண்டிருக்கிறேன். கூட்டணி அமைப்பேன்'' என்று திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்த அமமுகவின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதிரடியாக பேட்டியளித்துள்ளார். 

மேலும்,''அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் எந்த காலத்திலும் அதிமுக உடன் இணையாது, அது தற்கொலை செய்யும் முயற்சியாக இருக்கும். அமமுகவின் வளர்ச்சியை பிடிக்காமல் அதிமுக - அமமுக இணைய உள்ளதாக வதந்தி பரப்பப்படுகிறது'' என்று தெரிவித்தார்.

தொடர்ந்து சில நாட்களாக தினகரன் பற்றி பொய்யான வதந்திகளை பரப்பி, அவரின் வளர்ச்சியை தடுக்க நினைத்தவர்களுக்கு இந்த பேட்டியின் மூலம் நல்ல பதிலடி கொடுத்துள்ளார். இந்த பேட்டிக்கு பிறகு அமமுக தொண்டர்கள் மேலும் உற்சாகத்துடன் செயல்பட தொடங்குவார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dhinakaran said about dmk


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->