கேள்வி கேட்டால் உயிர் போய்விடும்.. ஒரே ஒரு விண்ணப்பத்தால் நேர்ந்த விபரீதம்..? கமுக்கமாக நடக்கும் மோசடி..! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏனம்பாக்கம் ஊராட்சியில் 150க்கும் மேற்பட்டோர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணியாற்றி வருகின்றனர்.

வறுமையில் உள்ள கிராம மக்களுக்கு இந்த வேலை செய்வதின் மூலம் கிடைக்கும் வருவாய் பெரும் உதவியாக உள்ளது. ஆனால் இந்த திட்டத்திற்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கப்படாததால் வேலை நாட்களும் படிப்படியாக குறைத்து வருகின்றனர்.

இதனால் வாரம் ஒரு குழு என்ற அடிப்படையில் சூழற்சி முறையில் தான் பணி வழங்கப்படுகிறது.சட்டக் கூலியும் முழுமையாக வழங்கப்படவில்லை.இந்நிலையில் ஏனம்பாக்கம் ஊராட்சியில் விவசாய தொழிலாளர்களுக்கு சரியாக நூறு நாட்கள் வேலை கிடைக்கவில்லை.

மேலும் வேலைக்கு செல்லாதவர்கள் பெயரில் வேலைக்கு வந்ததாக கணக்கு எழுதி ஏராளமான அளவிற்கு அரசு பணத்தை கொள்ளையடிப்பதாக கூறப்படுகிறது.அதுவும் பயனாளிகள் வங்கி கணக்கில் வரும் பணத்தை ஊராட்சி செயலரே எடுப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இதற்கு வங்கி அதிகாரிகளும் துணை போவதாக தெரிகிறது.இதனைத் தொடர்ந்து அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டக் குழு உறுப்பினர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள பொது தகவல் அதிகாரிக்கு எழுதிய கடிதத்தில் கிராமசபைக் கூட்டத்தில் என்னென்ன திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது, பயனடைந்த பயனாளிகள் விவரம், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் நகல், 2017-முதல் 2018-வரை நூறு நாள் வேலை திட்டத்தில் எவ்வளவு நபர்கள் பணியாற்றினார்கள் மற்றும் ஊதியம் வழங்கிய விவரம் வழங்க வேண்டும் போன்ற தகவல்களை கேட்டிருந்தார்.

இந்த தகவல் ஏனம்பாக்கம் ஊராட்சி செயலர் தேவன் என்பவருக்கு தெரியவந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த தேவன் மற்றும் அவரின் உறவினர்கள்  பிரேம் குமார் வீட்டிற்கு சென்று கொலை செய்து விடுவதாக கூறியுள்ளார்.

மேலும் குடும்பத்தையும் தரக்குறைவாக பேசியுள்ளனர்.இது குறித்து பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், நூறு நாள் வேலை திட்டத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறப் படுவது.

இதனை விசாரணை நடத்தி துறைவாரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

demand information through rti


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->