தனது மோசமான ரகசியத்தைக் கண்டுபிடித்ததால், திட்டம்தீட்டி மாமியாரை போட்டுத் தள்ளிய மருமகள்!! - Seithipunal
Seithipunal


பஞ்சாப் பகுதியை சேர்ந்தவர் சத்னர் கவுர். இவருக்கு ஜக்மோகன் சிங்,மன்மோகன் சிங் என இரு மகன்கள் உள்ளனர் .

இவர்களில் ஜக்மோகன் சிங்கின் மனைவி ஹர்ஜோத். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு ஜக்மோகன் உயிரிழந்தார். அதனை தொடர்ந்து ஜக்மோனின் மனைவி ஹர்ஜோத், அவரது மாமியாருடன் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் மாமியார், மருமகள் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.மேலும் ஹர்ஜோத் ஏகப்பட்ட கடன் வாங்கியிருந்ததால்,  தண்டு மாமியாரின் சொத்தை அடையவும் முயற்சி செய்துள்ளார்.

 இந்நிலையில்  ஹர்ஜோத்துக்கும் அப்பகுதியை சேர்ந்த விக்ரம் என்பவருக்கும் தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இதனை கண்டறிந்த மாமியார் இதுகுறித்து ஹர்ஜோத்தை கண்டித்துள்ளார். மேலும் ஹர்ஜோத்துக்கு பிறந்த குழந்தைக்கு எனது மகன் தந்தை இல்லை எனவும் அனைவரிடமும் கூறி வந்துள்ளார்.

இதனால் மாமியார் மீது கடும் கோபத்தில் இருந்த ஹர்ஜோத் அவரிடம் இருந்த சொத்துக்களை பறித்து, அவரை பழிவாங்க வேண்டும் என முடிவு செய்து, விக்ரமிடம் பணத்தை கொடுத்து மாமியாரை  கொலை செய்ய கூறியுள்ளார்.

மேலும் விக்ரமும் தனது தோழி அஞ்சு ராணியை அழைத்துக் கொண்டு, ஹர்ஜோத் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் மூவரும் சேர்ந்து சத்னரின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். இதனை தொடர்ந்து எனது மாமியார் எவ்வாறு இறந்தார் என தெரியவில்லை என அனைவரிடமும் நாடகமாடியுள்ளார். 

 இதனை தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சத்னரின்  உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது விக்ரம் மற்றும் அஞ்சு ராணி வீட்டிற்கு வந்தது தெரியவந்தது.மேலும் மூவரும் சேர்ந்துதான்  கொலை செய்தது எனவும் தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

daughter in law killed mother in law by illegal affairs


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->