நடுரோட்டில் பற்றி எரிந்த கண்டெய்னர் லாரி - கிருஷ்ணகிரியில் பயங்கரம்.! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒசூர் அருகே மதகொண்டப்பள்ளி என்னுமிடத்தில் மின்சார இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் இருந்து சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை பெங்களூர் ஜே.பி.நகருக்கு எடுத்துசெல்ல கண்டெய்னர் லாரியின் மூலம் அனுப்பி வைத்துள்ளனர். 

இந்த நிலையில், அந்த கண்டெய்னர் லாரி ஓசூர்-தளி சாலை உளிவீரணபள்ளி என்னும் கிராமத்தின் அருகே சென்று கொண்டிருந்தபோது தாழ்வான பகுதியில் உள்ள மின்சார வயர் கண்டெய்னர் லாரி உரசியதால் லாரியின் மேல்புறத்தில் திடீரென தீப்பற்றியது. 

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த லாரி ஓட்டுநர், லாரியை சாலையிலேயே நிறுத்திவிட்டு  தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். அதன் படி விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பலமணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் லாரியில் இருந்த இருபதுக்கும் மேற்பட்ட பேட்டரி வாகனங்கள் தீயில் எரிந்து நாசமானது. 

இந்த விபத்தில் சுமார் முப்பது லட்சம் ரூபாய் மதிப்பிலான மின்சார பைக்குகள் எரிந்து நாசமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பாக, போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நடுவழியில் மின்சார பைக்குகள் ஏற்றிச்சென்ற கண்டெய்னர் லாரி திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

conteinar lorry fire accident in krishnagiri


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->