தேரோடும் வீதியில் நடைபயிற்சி மேற்கொண்ட முதலமைச்சர்! உற்சாக வரவேற்பளித்த மக்கள்! - Seithipunal
Seithipunal


திருவாரூர் சன்னிதி தெருவில் வசித்து வரும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை தேரோடும் வீதியில் நடைபயிற்சி மேற்கொண்ட போது அங்கிருந்த மாணவிகள் கைகுலுக்கி முதல்வருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். 

தமிழக முதல்வர் நேற்று பிற்பகல் திருவாரூரில் இன்று நடக்கவிருக்கும் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தார். 

அவருக்கு தி.மு.கவினர் மாவட்ட எல்லையான கானூரில் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து முதல்வர், அவரது உறவினர் வீட்டில் ஓய்வெடுத்தபின் மாலை காட்டூரில் உள்ள கலைஞர் கோட்டத்திற்கு சென்றிருந்தார். 

பின்பு அங்கு காத்திருந்த பொதுமக்களிடம் இருந்து முதலவர் மனுவைப் பெற்றுக் கொண்டு, அங்கிருந்து சென்று காட்டூரில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் அம்மையாரின் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்தி விட்டு மீண்டும் இரவு உறவினர் வீட்டிற்கு வந்து ஓய்வெடுத்தார். 

இந்நிலையில் இன்று காலை தான் தங்கி இருந்த வீட்டில் இருந்து முதல்வர் நடைப்பயிற்சி மேற்கொள்வதற்காக வடக்கு வீதி வழியாக சென்று தியாகராஜ கோவிலுக்கு சொந்தமான குளத்தை சுற்றி பின்னர் தெற்குமட வளாகம் வழியாக மீண்டும் உறவினர் இல்லத்திற்கு வந்தடைந்தார். 

முதல்வர் நடை பயிற்சி மேற்கொண்ட போது வழி முழுவதும் பொதுமக்கள் நின்று கொண்டு அவரை உற்சாகமாக வரவேர்த்தனர். மேலும் அங்குள்ள மாணவிகள் சிலர் முதல்வருடன் கைக்குலுக்கி புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cm walking in tiruvarur


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->