கும்பாபிஷக செம்பு விழுந்து குழந்தை பலி!! தெய்வ குத்தமா!! - Seithipunal
Seithipunal


சிவகிரி அருகே உள்ள தேவி பட்டினத்தில் பாக்கிய விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் விழா நேற்று நடைபெற்றது. அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் அவ்விழாவில் தனது குடும்பத்துடன் பங்கேற்றனர்.

இவ்விழாவில் பங்கேற்ற கருத்தப்பாண்டியன், அவரது மனைவி காயத்திரி(29), இவர்களுக்கு 3 மாத கைக்குழந்தை கிஷோருடன் சென்றிருந்தனர். இவர்கள் கோபுரத்தின் கீழ் நின்று பார்த்துக் கொண்டிருந்தனர். 

கோபுர கலசத்தில் புனித நீர் தெளிப்பதற்காக செல்ல சாரம் கட்டப்பட்டிருந்தது. புனித நீர் வைக்கப்பட்ட செம்புகளில் ஒன்று பூஜை செய்யும் போது திடீரென தவறி, கூட்டத்தில் நின்று கொண்டிருந்த காயத்திரியின் கைகுழந்தையின் கிஷோர் தலையின் மீது விழுந்தது. 

இதனால் குழந்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.  இதனால் கும்பாபிஷேக விழாவே பரபரப்பு அடைந்தது.

பின்னர் காயம் அடைந்த குழந்தை கிஷோர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனாலும் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலே பரிதாபமாக கிஷோர் இறந்தார். இதனால் குழந்தையின் பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர்.

கும்பாபிஷேக விழாவின் போது கோபுரத்தில் இருந்து செம்பு விழுந்ததில் பரிதாபமாக இறந்த குழந்தையின் சம்பவம் பக்தர்கள் இடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Child death


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->