#BREAKING SV சேகர் மீது அதிரடி வழக்கு.!! - Seithipunal
Seithipunal


SV சேகர் மீது கோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண் பத்திரிகையாளரை அவதூறாக பேசியதற்கும், சமூகவலை தளங்களில் பெண் பத்திரிகையாளர்களை பற்றி தவறாக சித்தரித்து தகவலை பரப்பியதற்காகவும் தமிழகத்தில் அவருக்கு பலத்த எதிர்ப்பு கெளம்பியுள்ளது.

இந்நிலையில் தலித் பாண்டியன் என்பவர் கரூர் கோர்ட்டில் தொடுத்துள்ள வழக்கில்  வரும் 25 ம் தேதி அந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.

முன்னதாக பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு கருத்து கூறியதையடுத்து போலீசார் தன்னை கைது செய்து விடுவார்கள் என பயந்து எஸ்.வி.சேகர் தலைமறைவாகியுள்ளார் என கூறப்படுகிறது. 

கல்லூரி மாணவிகளை பேராசிரியை நிர்மலாதேவி பாலியல் தொழிலுக்கு அழைத்த விவகாரம் தொடர்பான ஆடியோ வெளியானவுடன், கவர்னர் பன்வாரிலால் புரோகித் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசும்பொழுது பெண் நிருபரின் கன்னத்தை தட்டிய விவகாரம் சர்ச்சைக்குரிய விசயமானது. இதனையடுத்து பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் கவர்னருக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இதற்கிடையில் நடிகர் எஸ்.வி.சேகர் தனது பேஸ்புக் தளத்தில் பெண் நிருபர்கள் பற்றி அவதூறு கருத்தை வெளியிட்டார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது வீட்டு முன்பு பத்திரிகையாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 31 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்துக்கு தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். 

இதனையடுத்து அவர் மீது இன்று நீதிமன்றத்தில் தலித் பாண்டியன் என்பவர் கரூர் கோர்ட்டில் தொடுத்துள்ள வழக்கில்  வரும் 25 ம் தேதி அந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

case filed on S.V segar


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->