கார் மீது மோதிய தனியார் பேருந்து: தூக்கி வீசப்பட்ட அ.தி.மு.க. பிரமுகர்! போலீசார் விசாரணை.! - Seithipunal
Seithipunal



தர்மபுரி, கடத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த ராமன் (வயது 67) மற்றும் சிலர் தர்மபுரியில் நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்கூட்டத்திற்கு விநாயகர் சரவணன் என்பவரது காரில் சென்றனர். 

பிறகு பொதுக்கூட்டத்தை முடித்துவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்த போது மணியம்பாடி அருகே காரை சாலையோரமாக நிறுத்திவிட்டு இறங்கி பேசிக் கொண்டிருந்தனர். 

அப்போது அந்த வழியாக வந்த தனியார் பேருந்து எதிர்பாராத விதமாக காரின் மீது மோதியதில் காரின் அருகே நின்று கொண்டிருந்த ராமன் தூக்கி வீசப்பட்ட நிலையில் பலத்த காயம் அடைந்தார். 

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக ராமனை மீட்டு அவசர ஊர்தி மூலம் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்த தொடர்பாக கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bus collides car accident admk celebrity injured


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->