கிடு கிடுவென அதிர்கிறது.. அலறியடித்து பார்க்கும் பொதுமக்கள் - பாலம் ஆடுகிறதா ? கன்னியாகுமரியில் உண்மை நிலை என்ன? - Seithipunal
Seithipunal


மார்த்தாண்டத்தில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை குறைக்க இப்பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வந்தனர்.

இதையடுத்து, மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் இதற்கான முயற்சியை மேற்கொண்டதை தொடர்ந்து கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் தேதி மார்த்தாண்டம் வந்த மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின்கட்கரி மேம்பாலம் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

அதே ஆண்டு மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் முன்னிலையில் மேம்பாலம் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றதை தொடர்ந்து மேம்பாலப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

ரூ. 179 கோடியில் அமையவுள்ள இப்பாலம் தமிழகத்தின் முதல் இரும்புப் பாலமாகவும், தென்னிந்தியாவின் மிக நீளமான இரும்புப் பாலமாகவும் அமையவிருக்கிறது. இந்த மேம்பாலத்துக்காக 112 ராட்சத பில்லர்கள் அமைக்கப்படுகின்றன. இதில் 21 தூண்கள் கான்கிரீட்டால் ஆனவை. மற்ற தூண்கள் அனைத்தும் இரும்பால் ஆனவை.

இப்படி சிறப்பம்சம் மிகுந்த பாலம் சமீபத்தில் அனைத்து கட்டுமானப்பணிகளும் நிறைவு பெற்று திறப்பு விழா கண்டது. மேலும் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டது.

அதனை பார்வையிட ஏராளமான பொதுமக்கள் சென்ற நிலையில், பலரும் பாலம் ஆடுவதாக புகார் தெரிவித்துள்ளார். ஒரு சிலர் அதனை சோதனை செய்து முகநூலில் வீடியோ பதிவிட்டும் வருகின்றனர்.

aதில், பலத்தின் மேல் ஒரு தண்ணீர் கேனை கொண்டு சென்று வைக்கின்றனர். எந்த வித தொடுதல் இன்றி தண்ணீர் கேனில் உள்ள நீர் தானாக ஆடுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்துள்ள பொதுமக்கள் பாலத்தின் உறுதி தன்மை குறித்து மீண்டும் மறுஆய்வு நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bridge shaking near nagarkovil


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->